என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதார த்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.
    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.

    ஈரோடு, ஜூலை. 28-

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது.முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

    மாணவ-மாணவிகளுக்கு

    அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. எனவே தடுப்பு நடவடிக்கையாக முதலில் 15 முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி முகாம்

    மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதார த்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. இதேபோல் முன்கள பணியா ளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது.

    தற்போது 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்களுக்கு மேல் கடந்த வர்களுக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் பெரும்பாலும் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடிக்கி விடப்பட்டு ள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்தம் மக்கள் தொகை 23,77,315 ஆகும்.

    இதில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 48 ஆயிரத்து 402 பேர் போட்டு உள்ளனர். இது 91 சதவீதம் ஆகும்.

    இதே போல் 14 லட்சத்து 57 ஆயிரத்து 436 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 80 சதவீதம் ஆகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.

    இதைப்போல் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 73 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இது 85 சதவீதமாகும். இதேபோல் 2-ம் தவணை தடுப்பூசியை 80,856 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 77 சதவீதம் ஆகும்.

    இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 55 ஆயிரத்து 27 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 83 சதவீதமாகும்.

    இதேப்போல் 45 ஆயிரத்து 975 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 69 சதவீதம் ஆகும். தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (28). இவர் தனது மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை ராமலிங்கம் (59). இவரது மனைவி இருவரும் கோபி சாய் அபிராமி நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இருவருக்கு மிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ராமலிங்கத்தின் மனைவி கோபத்தில் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ராமலிங்கம் மன வேதனை யில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் தனது தந்தையை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

    • ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    கோபி:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.லாரியை ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    லாரியில் டிரைவருடன் அதே பகுதியை சேர்ந்த லோடு மேன்கள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், மணிகண்டன், மாரியப்பன் ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரியின் முன் பகுதி முழுமையாக நொறுங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த செங்கல்கள் மாற்றப்பட்டு லாரி கிரேன் மூலமாக அகற்றப்பட்டது.

    லாரி விபத்துக்குள்ளான இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதே இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

    லாரி ரோட்டின் தடுப்பு மீது மோதிய போது எதிரே வாகனங்கள் வந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கரட்டடிபாளையத்தில் இருந்து குள்ளம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சென்டர் மீடியனில் 25 க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    நெடுஞ்சாலை–த்துறையினர் சென்டர் மீடியன் குறித்து பெரும்பாலான இடங்களில் எச்சரிக்கை வழிகாட்டு பலகை, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளதாலேயே விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

    • மாணிக்கம் பாளையம் பகுதியில் ஆசிப் வீட்டில் அருகில் வசிக்கும் மக்கள் ஆசிப் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் உடையவர் என்று தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யாசின் என்ற வாலிபரிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 24-ந் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அக்பர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜுபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசின் ஆகியோரது வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்களது வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று புலனாய்வு பிரிவினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து சதி வேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆசிப் மீது இந்திய தண்டனை சட்டம் 121, 122, 125 பிரிவுகளில் (அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தல், அதற்காக ஆட்களையும் ஆயுதங்களையும் சேகரித்தல், நட்பில் உள்ள ஆசிய நாடுகள் மீது போர் தொடுக்க முயற்சித்தல்) மற்றும் உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் ஆசிப்பை கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஈரோடு முதலாவது குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் ஆசிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

    ஆசிப்புடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும், சதி வேலைக்கு திட்டமிட்டது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிப் ஈரோட்டில் கமிஷன் அடிப்படையில் டைல்ஸ் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

    அவரிடமிருந்து செல்போன் லேப்டாப் டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. மாணிக்கம் பாளையம் பகுதியில் ஆசிப் வீட்டில் அருகில் வசிக்கும் மக்கள் ஆசிப் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் உடையவர் என்று தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் யாசின் என்ற வாலிபரிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
    • கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமானது. இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. தென்னகத்தின் காசி, திரிவேணி சங்கமம், திருநானா என பல்வேறு சிறப்புக்களுடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும்.

    இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகம் மற்றும் கூடுதுறை பகுதியில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 5 இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது.

    கோவிலை சுற்றிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர். ஆண்கள் , பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 15 -க்கும் மேற்பட்ட பரிசல்களில் நீச்சல் தெரிந்த உள்ளூர் மீனவர்கள், மற்றும் லைவ் ஜாக்கெட் அணிந்த பவானி தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக தயார் நிலையில் இருந்தனர்.

    பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் அணிந்து வர வேண்டாம் என போலீஸ் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜைகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    கொடுமுடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கருங்கல்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.
    • விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏ.ஜி.வெங்கடாசலம் (60). இவர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு அந்தியூரில் இருந்து கார் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வந்த கார் பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    இதையடுத்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவர அனுமதி உள்ளது.

    உள்ளூர் கிராம மக்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஜன்புரம் மற்றும் தலமலை ,திம்பம் பகுதியில் வனத்துறையினர் 3 சோதனைசாவடி அமைத்துள்ளனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படும்.

    இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது. இந்த சோதனைச் சாவடி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் இது பற்றி ஆசனூர் வனகோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு வேனை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் தலமலை வனச்சரகர் சதீஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று தடை செய்யப்பட்ட வனச்சாலையில் சென்ற சரக்கு வேனை மாடுகளுடன் பறிமுதல் செய்து தாளவாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மா நிலம், பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்முண்டா (31). இவரது தங்கை கணவர் ராம்சர்தார் (27). இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்து, ராம்சர்தாரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, திலீப்முண்டா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
    • அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மங்கானூரைச் சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வந்துள்ளார்.

    நேற்று அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.

    இதில் கொங்காடை ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம் முதல் மாதேஸ்வரன் வீடு வரையிலும், தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் பட்டய பாளையம் வரை உள்ள சாலை, ஒன்னகரை முதல் முத்தூர் வன எல்லை வரையிலும் தாமரைக்கரை பெஜில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணியர் நிழற்குடை, கடையிரட்டி பகுதியில் ஆழ்துளைக்கிணறு, தட்ட கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மேலும் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் மரியதாஸ் செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பர்கூர் சிவக்குமார் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×