என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ்எஸ் பங்கரவாத அமைப்பு"

    • மாணிக்கம் பாளையம் பகுதியில் ஆசிப் வீட்டில் அருகில் வசிக்கும் மக்கள் ஆசிப் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் உடையவர் என்று தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யாசின் என்ற வாலிபரிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 24-ந் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அக்பர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜுபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசின் ஆகியோரது வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்களது வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று புலனாய்வு பிரிவினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து சதி வேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆசிப் மீது இந்திய தண்டனை சட்டம் 121, 122, 125 பிரிவுகளில் (அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தல், அதற்காக ஆட்களையும் ஆயுதங்களையும் சேகரித்தல், நட்பில் உள்ள ஆசிய நாடுகள் மீது போர் தொடுக்க முயற்சித்தல்) மற்றும் உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் ஆசிப்பை கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஈரோடு முதலாவது குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் ஆசிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

    ஆசிப்புடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும், சதி வேலைக்கு திட்டமிட்டது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிப் ஈரோட்டில் கமிஷன் அடிப்படையில் டைல்ஸ் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

    அவரிடமிருந்து செல்போன் லேப்டாப் டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. மாணிக்கம் பாளையம் பகுதியில் ஆசிப் வீட்டில் அருகில் வசிக்கும் மக்கள் ஆசிப் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் உடையவர் என்று தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் யாசின் என்ற வாலிபரிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×