என் மலர்
ஈரோடு
- நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் குறுக்கே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி பல வருடங்களாக ஒரத்து ப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வை க்காமல் அப்ப டியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஆனால், கடந்த 8-ந் தேதி வெள்ள நீர் வர தொடங்கி அதிகரித்து வந்ததால் சாயக்கழிவுகள் கலந்த தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 1,900 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், தொடர்ந்து அதிக படியான வெள்ள பெருக்கு அதிகரித்து தற்போது ஒரத்துப்பாளையம் அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியது. அணையில் இருந்து 1,505 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரில் கருமை நிறம் இல்லாமல் நல்ல தண்ணீராக ஓடுகிறது. நேற்று மாலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 250 டி.டி.எஸ்., சாக குறைந்துள்ளது.
தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
இதேபோல் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆற்றில் கருப்பு நிறம் நீங்கி தண்ணீர் செல்கிறது.
உப்பு தன்மையும் குறைந்து விட்டது இனி இந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தாலம் என்றனர்.
- கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பா ர்வையில் அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் சம்மந்தப்ப ட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் கஞ்சா உபயோகப்படுத்து வதால் ஏற்படும் தீமைகள், அதனை விற்பனை செய்வோர் மீது எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைககள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 157 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 116 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 206 ேபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முழுமையாக கஞ்சா விற்பனையை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.
- இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்று செல்லும் லாரிகளை ஒற்றை அணைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்பு கட்டிகளை ருசித்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.
இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.
இதனால் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் கழித்து யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடர்ந்தது.
- தீ குச்சியானது தவறி மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
கவுந்தப்பாடி அய்யம்பா ளையம் ஆவராங்காட்டூரை சேர்ந்வர் பழனியப்பன் (60). உடல்நிலை பாதிக்க ப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
சம்பவத்தன்று பழனியப்பன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பீடி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார். அப்போது தீ குச்சியானது தவறி தனது மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.
இதில் பலத்த தீக்காய மடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்கு–மரஹடா, கள்ளம்பாளையம் மலை கிராமம்.இங்கு100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள் தினமும் பரிசல் மூலம் வியாபா–ரத்திற்காக சத்தியமங்கலம், கோத்தகிரி செல்கின்றனர்.
இதேபோல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் பரிசலில் சென்று வருகின்றனர். இங்குள்ள கல்லூரி மாணவர்களும் பரிசல் மூலமே கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
பரிசல் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. ஆனால் மழைக்கா லங்களில் திடீரென மாயா ற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சி, பைக்காரா, குன்னூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பைக்காரா அணை நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் நீர் வர வாய்ப்புள்ளதால் நேற்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். அதேபோல் வியாபாரிகள் விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடை தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை. இதேபோல் விவசாயிகள் வியாபாரிகள் வெளியில் செல்லாமல் முடங்கிப் போய் உள்ளனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நாங்கள் பரிசில் மூலம் தான் தினமும் பிழைப்பு க்காக வெளியூர் சென்று வருகிறோம். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
சில சமயம் ஆபத்தை பொறுப்பெடுத்தாமல் பிழைப்புக்காக பரிசலில் சென்று வருகிறோம். தற்போது நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது. இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை.
இதேப்போல் விவசாயிகள் வியாபாரிகளும் வெளியே செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி போய் உள்ளனர். அன்றாடம் வெளியே சென்று வருமானம் ஈட்டினால் தான் எங்கள் பிழைப்பு ஓடும். தற்போது 2 நாட்களாக கிராமத்திலேயே முடங்கி இருக்கிறோம்.
நாங்கள் நீண்ட வருடமாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு அதிகாரிகள் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணை செயலாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி அனைத்து பள்ளிகளிலும் துவங்குவதால் அதனை சமைத்து காலையில் உண்ணும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்.
அதை மதிய உணவு சமைக்கும் நிரந்தர அமைப்பாளர்கள், சத்துணவு பணியாளர்கள் அனைவரும் காலையில் நடக்கும் சம்பவத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால் அதையும் நாங்களே சமைத்து தருகி–றோம். எங்களுக்கு சம்பளத்தினை உயர்த்தி எங்களையே நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.
அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
- தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்தவர் அப்பாச்சி (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு அப்பாச்சி தனது மோட்டார் சைக்கிளில் வடுகபாளையம் பிரிவைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்பாச்சி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அப்பாச்சி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
- சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:
எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.
மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- கோட்டைகாட்டுவலசு வெள்ளை முனிசாமி கோவில் கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது.
- சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை காட்டுவலசில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான வெள்ளை முனிசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழா கொண்டாடுவது நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது. காலை 10 மணியளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து முனிக்கு அபிசேகம் செய்தனர்.
மதியம் பொங்கல் வைத்து வெள்ளைமுனிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். மாலை கிடாய் வெட்டினர். அதனை தொடர்ந்து வெள்ளை முனிக்கு சிறப்பு அபிசேகம், நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
- போலீசார் விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
- இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தனர்.
அவர்கள் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆசிப் முசாப்தீன் (27) என்ற வாலிபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், டைரிகள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினார்.
போலீஸ் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கைதான ஆசிப் முசாப்தீன் மீதான வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு நேற்று முன்தினம் வந்தது.
இதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து முசாப்தீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையின் போது முசாப்தீனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஆசிப் முசாப்தீனை போலீசார் ரகசிய இடத்தில் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது.
அவருக்கு யாரெல்லாம் உதவி செய்தனர். தமிழகத்தில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளை முசாப்தீ னுவிடம் அடுக்கடுக்காக கேட்டனர். விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உடன் இருந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் போலீஸ் காவல் முடிவடைய உள்ளதால் போலீசார் முசாப்தினை இன்று மாலை மீண்டும் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 726 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 619 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






