search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "measures"

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • நகர்மன்ற தலைவர் கொசு மருந்து அடித்தார்

    தேவகோட்டை

    தமிழக அரசு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவ டிக்கையை நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையா ளர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராம்நகர் 11 -வது வார்டு சஞ்சீவிபுரம், செந்தில்நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொசு மருந்து அடித்தார். ஆணையாளர் பார்கவி உடனிருந்தார்.

    அந்த வீடுகளில் உள்ள நபர்களை மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுநர் டாக்டர் கிருஷ்ண வேணி, நகராட்சி சுகாதா ரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் பரிசோதனை செய்தனர். நகராட்சி பணி யாளர்கள் வீடு முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வீட்டின் உரிமையாளருக்கு டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் நகரில் டெங்கு அறிகுறி ஏற்பட்ட நபர்கள் இருக்கும் பகுதி களில் காலை, மாலை இரு வேளைகளில் கிருமி நாசி னிகள் தெளிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பணி யாளர்கள் நகர் முழுவதும் தீவிரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம்நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்புவழிமுறைகளை பின்பற்றிடவும் கலெக்டர் வினீத் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உடலின் நீர்ச்சத்து குறையாமல்பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போதுகுடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் . ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர்,மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள,காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

    பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணவேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது. பருக இளநீர்போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பானநோய்களை கண்டறிய வேண்டும்.குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர்நீரிழப்பை குறிக்கலாம். மழலைப்பள்ளிகளை கோடைகாலம் முடியும் வரை செயல்படுத்தவேண்டாம். முதியவர்களுக்கான வழிமுறைகள் தனியேவசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறைசரிபார்த்து கொள்ளவேண்டும்.

    முதியவர்களின்அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்பஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில்குளிக்கவைக்க வேண்டும்.போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.100 நாட்கள் பணியின் போது நற்பகல் 12.00 மணிக்குமேல் பணி செய்யாமல் இருப்பதுபோன்றவையும் ஆகும்.

    கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமானஅளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில்போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர்கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வெயில் காலங்களில் வாகனங்களில் தனியேவிட்டு செல்லக் கூடாது.

    மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில்துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடிவீடுகளிலும், கூரை வீடுகளிலும்உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால்கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள்சூடாகி மின் விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

    எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில்வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நிலஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ்சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்தியபிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி, கொடியேற்றம் ஆகியவை நடைபெற்றது. பண்டிகை தொடங்கிய நாளில் இருந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் குண்டம் திருவிழா வரும் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் அந்தியூர் தாலுகா மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பத்ரகாளியம்மன் கோவில் அன்னதான கூடத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் தாசில்தார் தாமோதரன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்ட த்தில், காவல்துறை, தீயணை ப்பு துறை, மின்சார துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரி கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் சாக்கு பழனிச்சாமி, தி.மு.க. பேரூர் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், கோவில் செயல் அலுவலர் நந்தினீ ஸ்வரி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்,

    பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பி.ஜே.பி. நிர்வாகி சரவணன், கோவில் அலுவலர்கள் செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் அறங்காவலர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
    • சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

    எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

    மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.32,500 கோடி) அளவிற்கு தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக கடந்த மாத மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 545 முக்கிய பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கூடுதல் வரியை அண்மையில் சீன பொருட்களுக்கு விதித்தார். இதற்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் ‘பாக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயத்தில் சீனா உடன்பாடு காண விரும்பினால் அதுபோல் அமெரிக்காவும் நடந்துகொள்ளும். ஆனால் இது அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்காவால் 500 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க இயலும். அதே நேரம் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை” என்றார். 
    ×