search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - கலெக்டர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - கலெக்டர் அறிவிப்பு

    • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம்நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்புவழிமுறைகளை பின்பற்றிடவும் கலெக்டர் வினீத் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உடலின் நீர்ச்சத்து குறையாமல்பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போதுகுடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் . ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர்,மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள,காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

    பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணவேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது. பருக இளநீர்போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பானநோய்களை கண்டறிய வேண்டும்.குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர்நீரிழப்பை குறிக்கலாம். மழலைப்பள்ளிகளை கோடைகாலம் முடியும் வரை செயல்படுத்தவேண்டாம். முதியவர்களுக்கான வழிமுறைகள் தனியேவசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறைசரிபார்த்து கொள்ளவேண்டும்.

    முதியவர்களின்அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்பஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில்குளிக்கவைக்க வேண்டும்.போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.100 நாட்கள் பணியின் போது நற்பகல் 12.00 மணிக்குமேல் பணி செய்யாமல் இருப்பதுபோன்றவையும் ஆகும்.

    கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமானஅளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில்போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர்கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வெயில் காலங்களில் வாகனங்களில் தனியேவிட்டு செல்லக் கூடாது.

    மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில்துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடிவீடுகளிலும், கூரை வீடுகளிலும்உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால்கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள்சூடாகி மின் விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

    எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில்வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நிலஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ்சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்தியபிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×