என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கோவை பெரிய நாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் (33). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள சந்தோஷ்குமார் ஷீட் மெட்டல் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கடந்த 2013-ல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம், தம்பி விமல்ராஜ் ஆகியோர் சென்று விசாரித்துள்ளனர்.

    அப்போது இரவு சுமார் 8 மணியளவில் சந்தோஷ்கு மார் கஞ்சி குடித்ததாகவும், அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவரை சத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் உயர் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு டாக்டர்கள்ள் பரிசோத்த பின், சந்தோஷ்கு மார் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரி ன்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளிதிருப்பூர், மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது.

    மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொது–மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெ க்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டு உள்ளனர். 

    • குழந்தை இல்லாத மன வேதனையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வேலாங்குட்டை, துய்யம் பூந்துறை, கே.கே. வலசை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கவிதா (வயது 36).

    இவருக்கு கடந்த 9 வருட ங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமண–மானது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடுமலைப்பேட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்றனர்.

    இதைதொடர்ந்து கவிதா மோகன்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கவிதா மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பூதப்பாடி, பூனாச்சி குருவ ரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள கோம்பூர் பகுதி கரையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோம்பூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின் அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    மேலும் வெள்ளம் வெளியேரிய பிறகு அதனை சுத்தப்படுத்தி தண்ணீரை சுத்திகரிக்க மீண்டும் சில நாட்கள் ஆகும்.

    இது மாதிரியான காலங்களில் இருந்து பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேடான பகுதியில் அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதுவரை பொதுமக்களின் அவ்வப்போதையை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தர நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    • சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் சண்முகம் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்பு என்கிற சண்முகம் (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அதிகாலை சண்முகம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரி யவந்ததும் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியில் பச்சியப்பன் (67) பணி ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

    பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, சுகுணாபுரம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பச்சியப்பன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவானி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அப்துல் ஹமீது பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இறந்த பச்சியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது.
    • இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

    மழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாளவாடி பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலத்தை முழ்கியபடி செல்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் காடக நல்லி பகுதியில் உள்ள சிக்கூர், பெரிய உள்ளேபாளையம், சின்ன உள்ளே பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பீன்ஸ், உருளை கிழங்கு, வெள்ளைபூண்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது. மேலும் இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் வடிய வழியில்லாமல் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகள் அழுகி வருகிறது. எனவே வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-12, பெருந்துறை-53,கோபி செட்டிபாளையம்-46, தாளவாடி-8.3, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-4, பவானி-8.4, நம்பியூர்-7, சென்னிமலை-50, மொடக்குறிச்சி-11, கவுந்தப்பாடி-4.6, எலந்த குட்டை மேடு-11.2, கொடிவேரி-6, குண்டேரி பள்ளம்-4.2, வரட்டுப்பள்ளம்-5, மாவட்டம் முழுவதும் மொத்தம் 232.7 மி.மீ. மழை பெய்தது.

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    நேற்று சுகாதாரத்துறை யினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியு ள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 653 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×