கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 260 ஆக குறைந்தது

மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 260 ஆக குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

நேற்று சுகாதாரத்துறை யினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியு ள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 653 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com