search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
    X

    சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×