என் மலர்
ஈரோடு
- ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினி யோகம் இருக்காது.
- இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.
ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, நேரு வீதி, முத்துசாமி வீதி, சத்தி ரோடு பிருந்தா வீதி, கிருஷ்ணா செட்டி வீதி, ஏ.பி.டி. வீதி, இந்திரா வீதி, பழைய பாளையம், கவுந்தப்பாடி மார்க்கெட், சத்தி ரோடு, நால் ரோடு, சிறுவலூர் ரோடு, ஈரோடு ரோடு பாரதியார் வீதி, பவானி ரோடு, பைபாஸ், அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி, செட்டி பாளையம், ஏ.கே. வலசு, எஸ்.பி. பாளையம், எல்லீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இரு க்காது.
இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
- ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.
- பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
ஈரோடு:
ஓணம் பண்டிகை இன்று கேரளா மக்களால் உற்சா கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகாபலி மன்னரை வரவேற்பு முகமாக கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான கேரளா வாழ் மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். பெரும்பாலான கேரளா மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளா சென்று விட்ட நிலையில் ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.
ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இன்று ஓணம் பண்டிகை முன்னி ட்டு அதிகாலை யிலேயே எழுந்து குளித்து பாரம்பரிய உடைகள் அணிந்து ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.
பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் தங்களது பாரம்பரிய நடனமாடி அசத்தினர். இதனால் அந்த பகுதியே விழா கோலம் கொண்டது. இதைத் தொடர்ந்து பல வகையாக உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டன.
- ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம்.
- கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சி அடைந்தார். அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்' என தெரிவித்தனர். இதையடுத்து அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
- அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.
- இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு திரு மணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரகாசுக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அங்கு பிரகாஷ் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த நிலையில் பிரகா சின் மனைவி அந்தியூர் போலீசில் என் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் விசா ரணை நடத்தினர். இதை தொடர்ந்து பிரகாசின் உடலை பிரேத பரி சோதனைக்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது பிரகாசின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது மது போதையில் இறந்தாரா என தெரிய வரும் என கூறினர்.
இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்கெ்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்தது.
- இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னிமலை:
புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா (31).இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட னர்.
அனிதாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானது. முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவர் மூலம் அனிதாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெய க்குமார் மூலம் அனிதாவுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஜெயக்குமாரும், அனிதாவும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களாக சென்னிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அனிதாவின் மகள் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அனைவரும் தூங்கி விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அனிதாவின் மீது தீ பிடித்தது. இதை தொடர்ந்து முகம், சேலை யில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அனிதா அலறினார்.
அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அனிதாவின் கணவர் ஜெயக்குமார் ஓடி வந்து அனிதாவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
இதில் படுகாயம் அடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் சென்று சோதனை மேற்கொ ண்டனர். அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் விற்பனை செய்ய பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை வாலிபர் ஒருவர் வைத்து இருந்தது தெரியவந்தது.
அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சமையல் வேலை செய்து வரும் இவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
- இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.
இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 6,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியில் தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.
அவர் விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
உடனடியாக அந்த தொழிலாளி அக்கம் பக்கத்தார் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
- சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 987 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 654 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,492 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 6 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 987 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 654 ரூபாய்க்கு விற்பனையானது.
- ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1.85 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி யாற்றில் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் பவானி, அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 முறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி மட்டுமே நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் மீண்டும் வீடு திரும்பினர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உடைமை களை மூட்டை முடிச்சு கட்டி முகாம்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.
தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் விஜய் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இதேப்போல் கருங்கல்பாளையம் காவிரிக்கரை, அம்மாபேட்டை, கொடுமுடி பகுதிகளில் வருவாய் துறையினர் முகாமிட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.
இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.
இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.






