மதுக்கடை அருகே இறந்து கிடந்த விவசாயி

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
மதுக்கடை அருகே இறந்து கிடந்த விவசாயி
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு திரு மணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரகாசுக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அங்கு பிரகாஷ் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த நிலையில் பிரகா சின் மனைவி அந்தியூர் போலீசில் என் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் விசா ரணை நடத்தினர். இதை தொடர்ந்து பிரகாசின் உடலை பிரேத பரி சோதனைக்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது பிரகாசின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது மது போதையில் இறந்தாரா என தெரிய வரும் என கூறினர்.

இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்கெ்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com