என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதா–ரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்ய ப்பட்டுள்ள 44 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பொருட்டு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளா ண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி யாற்றுபவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். 21 முதல் 40 வயதுடையவர்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

    முன்வைக்கும் திட்டத்தின் உரிமை ஒற்றை உரிமை யாளருடையதாக இருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் இ வேளா ண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு க்கான செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க இயலாது.

    தொழில் முனைவோராக விருப்ப–முள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ண ப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வங்கிகளில் பெறப்பட்ட கடன் ஒப்பதல் ஆவணம் ஆகிய ஆவணங்க ளுடன் வருகிற 20-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    எனவே தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.
    • காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

    முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், இத்திட்டத்தை முன்கூட்டியே சோதனை அடிப்படையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இத்திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது.

    காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சோதனை அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சுட சுட சேமியா கிச்சடி, ரவா கேசரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேயர் நாகரத்தினம், கணேசமூர்த்தி எம்.பி, ஆகியோர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறினர். மாணவ மாணவிகளுடன் மேயர் நாகரத்தினம் அமர்ந்து உணவு ருசித்து சாப்பிட்டார். இதே போல் பெற்றோர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்களும் ருசித்து சாப்பிட்டனர்.

    இன்று மாநகராட்சியில் உள்ள 26 பள்ளிகளைச் சேர்ந்த 2,445 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை 8 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி திட்டம் அமலுக்கு வர உள்ளதையடுத்து திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வந்து சேர்ந்ததா? சிற்றுண்டி தரம், சுவை, மாணவர்களின் விருப்பம், தேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    • தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    • போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மது பாட்டில்கள் போலியானது என்றும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கும்பகோணம் போலீசார் ஈரோடு போலீசாருடன் இணைந்து ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது.

    மேலும் அங்கு இருந்த 4பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்தனர்.

    மேலும் போலீசார் மதுபான தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

    முதல் கட்ட விசாரணையில் இந்தபோலி மதுபான தொழிற்சாலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடந்த சில மாதங்களாக மது பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இந்த மதுபாட்டில்களை எப்படி விற்பனை செய்தார்கள், யார் மூலம் விற்பனை செய்தார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காதல் திருமணம் குறித்து மோகன்ராஜின் பெற்றோருக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதையடுத்து அவர்கள் பெங்களூருக்கு சென்று மோகன்ராஜை பவானிக்கு அழைத்து வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூரில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீசிவரஞ்சனி (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது மோகன்ராஜிக்கும், ஸ்ரீசிவரஞ்சனிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் குறித்து மோகன்ராஜின் பெற்றோருக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பெங்களூருக்கு சென்று மோகன்ராஜை பவானிக்கு அழைத்து வந்தனர்.

    காதல் திருமணம் செய்த கணவர் மோகன்ராஜ் தன்னுடன் பேசவில்லை என்றும், எனவே அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீசிவரஞ்சனி பவானி அண்ணாநகர் பகுதியில் உள்ள மோகன்ராஜ் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தெரிய வந்ததும் பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீசிவரஞ்சனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்றார்.

    • கிராம மக்கள் தினந்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.
    • பொதுமக்களும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியை அடுத்துள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தினந்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

    தினமும் இருமுறை மட்டுமே அரசு பஸ் இயக்குவதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அதேபோல் மாக்கம்பாளையம், அருகியம், கோம்பை தொட்டியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தினமும் அரசு பஸ்சில் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாக்கம்பாளையம், அருகியம், கோம்பை தொட்டி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரமாக அரசு பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாக்கம்பாளையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் வாடகை டெம்போவிலும, வனப்பகுதியில் நடந்தும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்தும் பள்ளிக்கு செல்கின்றனர்.

    இதே போல் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். மாணவ- மாணவிகள், பொதுமக்கள் காட்டாற்றை கடந்து செல்லும் போது ஒருவருக்கொருவர் கைகோர்த்து படி சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் பாலம் கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 8-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம், குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை ஆகவே வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பா பிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுர ங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணி யிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலை கள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்ற வற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனை த்தும் நிறைவடைந்தது கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபி ஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் முகூ ர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால யாக பூஜை கள் நடைபெற்று வருகி ன்றன. கும்பாபி ஷேக த்தையொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக சாலைகள் அமைக்க ப்பட்டு தினமும் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 8-ம் கால யாக பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டனர்.

    இதைத் தொடர்ந்து காலை 10.35 மணிக்கு விமான ராஜ கோபுரங்க ளுக்கு, பரிவார மூர்த்த ங்களுக்கும், கபாலீஸ்வரர் சுவாமிக்கும் புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது கூடியிருந்த மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொடும் அளவுக்கு அதிர்ந்தது.

    விழாவில் சரஸ்வதி எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே. எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், அறங்காவல் குழு தலைவர் செல்வம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, உதவி ஆணை யாளர் அன்னக்கொடி, செயல் அலுவலர்கள் கயல்விழி, அருள்குமார், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் தீபாரா தனை கல்யாண உற்சவம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பழனிசாமி (64). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியே சென்று விட்டார். இதனால் பழனிசாமி வேதனையடைந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
    • அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமம், பவானி நதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.

    7-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும் மகாபூர்ண குதியும், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து 3-ம் காலயாக பூஜை அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடை பெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 8.15 மணி அளவில் நடைபெற்றது. இதில் கோபுரகலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் கலிங்கியம், கோபி, அவ்வையார் பாளையம், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

    • பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 55). இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணம்மாவின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமியை சிகிச்சை க்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னால் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008-ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரி க்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே விண்ணப்ப ங்களை வரும் 30-ந் தேதி முடிய பதிவு செய்யலாம். 30-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ண ப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    குறிப்பிட்ட காலக்கெ டுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன் புல வரைபடம் (6 நகல்கள்) கிரைய பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய தற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் ( நிரந்தர கணக்கு எண் அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்திய தற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவல–கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டது எனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்ததார். தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்து ஆய்வு செய்தார்.

    இதில் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ, கூடுதல் ஆணையர் (இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அைமச்சர் சேகர்பாபு பேசியதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது, 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளாத கோவில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் என சுமார் 11,959 கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

    மேலும் குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய தேர்கள் புது ப்பிப்பது, புதுத்தேர்களை உருவாக்குவது என பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல் தற்போது சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் கோவில் மகா மண்டபம் மற்றும் சோபனமண்டபத்தில் கைப்பிடிகள் பித்தளையாக அமைக்க உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ராஜ கோபுரம் கட்டுமான பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை ராஜ கோபுரம் அமைக்க ப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவமனையை அமைக்கப்படும். அந்த மருத்துவ மனையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய த்துறை இணைஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணை யர்திரு.அன்னக்கொடி, ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், இந்து சமயஅற நிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×