search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 8-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம், குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை ஆகவே வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பா பிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுர ங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணி யிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலை கள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்ற வற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனை த்தும் நிறைவடைந்தது கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபி ஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் முகூ ர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால யாக பூஜை கள் நடைபெற்று வருகி ன்றன. கும்பாபி ஷேக த்தையொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக சாலைகள் அமைக்க ப்பட்டு தினமும் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 8-ம் கால யாக பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டனர்.

    இதைத் தொடர்ந்து காலை 10.35 மணிக்கு விமான ராஜ கோபுரங்க ளுக்கு, பரிவார மூர்த்த ங்களுக்கும், கபாலீஸ்வரர் சுவாமிக்கும் புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது கூடியிருந்த மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொடும் அளவுக்கு அதிர்ந்தது.

    விழாவில் சரஸ்வதி எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே. எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், அறங்காவல் குழு தலைவர் செல்வம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, உதவி ஆணை யாளர் அன்னக்கொடி, செயல் அலுவலர்கள் கயல்விழி, அருள்குமார், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் தீபாரா தனை கல்யாண உற்சவம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    Next Story
    ×