என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஆப்பக்கூடல் அருேக உள்ள அத்தாணி குப்பாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தவாகிருஷ்ணன், இவரது மனைவி பவித்ரா.
    • பிறந்த 11 நாளிலேயே ஆண் குழந்தை இறந்தது குறித்து சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருேக உள்ள அத்தாணி குப்பாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தவாகிருஷ்ணன் (23), இவரது மனைவி பவித்ரா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் பவித்ரா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 29-ந் தேதி கருவல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் குழந்தை பிறந்த 11-வது நாளில் பவித்ரா தனது குழந்தைக்கு பால்கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா குழந்தையை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுப்பற்றிதெரிய வந்ததும் ஆப்பக்‌கூடல் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் குழந்தையின் சாவுக்கான காரணம் தெரியவரும்.

    மேலும் பிறந்த 11 நாளிலேயே ஆண் குழந்தை இறந்தது குறித்து சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் படித்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் கூடுவதால் பவானி கூடுதுறை சிறந்த பரிகார ஸ்தலம், தென்னகத்தின் காசி சுற்றுலா தளம் என பல பெயர்கள் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கூடுதுறை பகுதியில் பரிகாரங்கள் செய்ய உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து தினமும் பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரங்கள் செய்யவும் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது பற்றி தெரியாமல் வந்த ஏராளமான வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரங்கள் செய்யவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    • ராணுவவீரர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
    • சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராணுவ வீரரை கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (21). ராணுவவீரர். இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் பவானி அனைத்து மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தனர்.

    இதையடுத்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவவீரர் லோகேஷ் மீது தெரிவித்த புகார் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ராணுவ தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ராணுவ வீரர் லோகேஷ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் லோகேஷை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோவில் ராணுவ வீரர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

    ஈரோடு, செப். 9-

    கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடுமுடி காவிரி கரையோர பகுதிகளிலும் வெள்ளம் நீர் புகுந்தது.

    இதனால் கொடுமுடி அடுத்த இலுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக இன்று மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனினும் ஈரோடு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 முகாம்களில் 600 பேர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட முருகேசன் நகரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.44 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

    இந்த பூங்காவை அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்பொழுது அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    மாநகராட்சி அதிகாரிகள் வந்ததும் அந்த பகுதி மக்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் அதிமுக வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி,வார்டு செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

    அவர்கள் பூங்கா சுவரை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,

    பூங்காவின் சுற்று சுவரை அனுமதியின்றி சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக அங்கு குழிகள் தோண்டி மணலை நிரப்பியுள்ளனர்.

    இது சம்பந்தமாக மாநகராட்சி சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

    • பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர்.
    • விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்படுவதாக பர்கூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூர் தோஸ்த்து வாகத்தில் இருந்து சோளம்லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் தடை செய்ய ப்பட்ட பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ஆன்ஸ் 35 மூட்டை, விமல் பாக்கு 15 மூட்டை, வி.ஐ. டோபோகோ 3 மூட்டை, ஆர்.எம்.டி. 2 பாக்ஸ் உள்பட போதை பொருட்கள், சரக்கு வாகனம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் பவானி அந்தியூர் பிரிவு பகுதி சேர்ந்த அருண் (36), மற்றும் கொள்ளேகால் மாவட்டம் சாம்ராஜ்நகர் ராமாபுரம் கோபிசெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய பேரையும் போலீசார் கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.
    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.

    மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் நடக்க வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் வலியுறுத்தினார்.

    மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே நல்பெயரை வாங்கும் வகையில் நல்ல முறையில் பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தேவப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் 11 பேர் சூதாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிரா மத்தை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புர த்தை சேர்ந்த சித்தமல்லு (35), அருள்வாடி சித்தமல்லு (35), சிவசங்கர் (40), சுப்பிர மணி (42), சுப்பிரமணி (45) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
    • தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானிசாகர், வரட்டு பள்ளம் , குண்டேரி பள்ளம் பெரும்பள்ளம் ஆகிய அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 102 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.

    அணைக்கு வினாடிக்கு 4, 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்கா–கவும், குடிநீருக்காகவும் 4,000 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அன்னையான வரட்டுபள்ளம் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணை இன்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது.

    இதே போல் 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.74 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.13 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.
    • ஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன்படி 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு 6 மாத காலத்திற்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகம் முழு வதும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்தம் மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

    இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 52 ஆயிரத்து 535 பேர் போட்டு உள்ளனர். இது 95 சதவீதம் ஆகும். இதே போல் 15 லட்சத்து 14 ஆயிரத்து 560 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

    இது 87 சதவீதம் ஆகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.

    இதேப்போல் மாவட்ட த்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 352 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இது 87 சதவீதமாகும்.

    இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசியை 82, 140 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 79 சதவீதம் ஆகும்.

    இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 56 ஆயிரத்து 589 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 86 சதவீதமாகும்.

    இதைப்போல் 49 ஆயிரத்து 64 பேர் இரண்டாம் தவணை தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு உள்ளனர். இது 73 சதவீதம் ஆகும்.

    பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வக்கீல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வக்கீல் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சாமிநாதன் (37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 2000 வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துப்பாயைம்;, இச்சிப்பாயைம், வள்ளிபுரம், அஞ்சூர் மற்றும் கொந்தளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் கொளத்துப் பாயைம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.0.82 லட்சம் மதிப்பீட்டில் கொளத்துப் பாளைம் நூலகம் சீரமைப்பு பணியினை பார்வையிட்டு புத்தகம் வைத்திருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும், போதுமான புத்தகங்கள் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் சமூக மாற்றம் என்பது மாணவர்களாகிய உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும், மாணவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளார்களிடம் வழங்க முன்வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அஞ்சூர் ஊராட்சி, காரவலசு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தினை ஆய்வு செய்து, காலியாக உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைக்க ஆசிரியர்களுக்கு உத்தர–விட்டார்.

    மேலும் அதே பகுதியில் சொரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது விளைநிலத்தில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து குர்குமின் வேதிப்பொருள் தன்மை மாறாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருவதை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இச்சிப்பாளையம் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து பதிவேடுகள், எடை இயந்திரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என ரூ.89.67 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பணிகளை உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக கொந்தளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0.82.0 எக்டர் பரப்பளவில் விவசாயி முருகேசன் அமைத்துள்ள நுண்ணீர் பாசன கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிடம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முன் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி விவரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பின் நீர்ப்பாசனம் குறித்து கேட்டறிந்தார். இது 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட ரூ.1,21,091 மதிப்பீட்டில் அமைக்க–ப்பட்டது எனவும் வேலையாட்கள் மற்றும் நேரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வள்ளிபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 0.25 எக்டர் பரப்பளவில் விவசாயி கவின்குமார் என்பவர் தனது நிலத்தில் நிரந்திர காய்கறிப் பந்தல் அமைக்க ப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    0.25 எக்டர் பரப்பளவில் கல்தூண்கள் நட்டு கம்பிகள் இழுத்து கட்டி பந்தல் அமைக்க ரூ.1,91,300 செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் தனது வயலில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளார். 0.25 எக்டர் சாகுபடி செய்ததற்கு சாகுபடி செலவு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் நிகர லாபமாக ரூ.60,000 கிடைக்கும் எனவும் கலெக்டரிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கக வேளாண்மை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின கீழ் 50 சதவீத மானியத்தின் கீழ் ரூ.2000 மானியத்தில் மருந்தடிக்கும் கருவியினை 1 விவசாயிக்கும், ரூ.722.50 மானியத்தில் தார்ப்பாயினை 1 விவசாயிக்கும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் மாசிலாமணி, வேளாண் உதவி இயக்குநர் பி.யசோதா, உதவி இயக்குநர் (தோட்டக்க லைத்துறை) தியாகராஜன், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பத்மனாபன் (கி.ஊ), மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி உள்பட அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×