search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "did not get the first dose"

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.
    • ஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன்படி 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு 6 மாத காலத்திற்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகம் முழு வதும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்தம் மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

    இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 52 ஆயிரத்து 535 பேர் போட்டு உள்ளனர். இது 95 சதவீதம் ஆகும். இதே போல் 15 லட்சத்து 14 ஆயிரத்து 560 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

    இது 87 சதவீதம் ஆகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.

    இதேப்போல் மாவட்ட த்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 352 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இது 87 சதவீதமாகும்.

    இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசியை 82, 140 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 79 சதவீதம் ஆகும்.

    இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 56 ஆயிரத்து 589 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 86 சதவீதமாகும்.

    இதைப்போல் 49 ஆயிரத்து 64 பேர் இரண்டாம் தவணை தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு உள்ளனர். இது 73 சதவீதம் ஆகும்.

    பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×