என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் அணை நீர்மட்டம்"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 1,600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 2,800 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 75.83 அடியாக சரிந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.83 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்க ராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 86 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.30 கனஅடியும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.26 கன அடியாக உள்ளது.

    • இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
    • தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானிசாகர், வரட்டு பள்ளம் , குண்டேரி பள்ளம் பெரும்பள்ளம் ஆகிய அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 102 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.

    அணைக்கு வினாடிக்கு 4, 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்கா–கவும், குடிநீருக்காகவும் 4,000 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அன்னையான வரட்டுபள்ளம் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணை இன்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது.

    இதே போல் 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.74 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.13 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×