search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய அனுமதி
    X

    பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய அனுமதி

    • காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் படித்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் கூடுவதால் பவானி கூடுதுறை சிறந்த பரிகார ஸ்தலம், தென்னகத்தின் காசி சுற்றுலா தளம் என பல பெயர்கள் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கூடுதுறை பகுதியில் பரிகாரங்கள் செய்ய உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து தினமும் பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரங்கள் செய்யவும் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது பற்றி தெரியாமல் வந்த ஏராளமான வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரங்கள் செய்யவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×