என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போலீஸ் விசாரணையில் கடந்த 1½ வருடமாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் வேலை விஷயமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார்.

    ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அவர் அருகே வந்த ஒரு வாலிபர் தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும் தனது பெயர் ஜிபு (26) என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    மோளகவுண்டன் பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் இருப்பதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்.

    அதற்கு அந்த வாலிபர் சரி என்று ஒப்புக்கொண்டு ஜிபு கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அந்த மசாஜ் சென்டரில் இருந்த கேரளாவை சேர்ந்த சிஜோ (25) என்பவர் 3 பெண்களை காண்பித்து இதில் உங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வேறு அறைக்கு சென்று விட்டார். அந்த வாலிபர் 3 பெண்களிடம் அவர்களது பெயரை கேட்டு உள்ளார்.

    அப்போது அந்த பெண்கள் தாங்கள் அரியானா, டெல்லி மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மசாஜ் செய்யும் வேலை என்று சொல்லி அழைத்து வந்து தங்களை ஜிபு, சிஜோ ஆகியோர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்து சென்று விடுங்கள் என்று அந்த பெண்கள் அந்த வாலிபரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுத்து வருவதாகவும் ஜிபு, சிஜோ ஆகியோரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்டனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவை சேர்ந்த ஜிபு மற்றும் சிஜோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் கடந்த 1½ வருடமாக இந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன், தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ்(46) என்பவரை கைது செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன்(32), தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகன ங்கள் முகாமிற்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறை வடைகிறது. எனவே இன்று நடந்த சிறப்பு முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

    • வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும்.
    • ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யான பர்கூர் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை.

    இந்த அணையில் மழைக் காலங்களில் மலைப்பகு திகளில் பெய்யும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த அணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதனை மீன்வளத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்க படுகின்றது. அந்த வகையில் வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும். அதில் ஒரு சில மீன்கள் இறந்து விடுகின்றது. மீதம் உள்ள மீன்கள் இனப்பெ ருக்கம் அடைகின்றது.

    ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் அவ்வப்போது மீன்கள் இறந்து அணையின் ஓரப்பகுதியில் செத்து மிதக்கிறது எனவும், இந்த அணையில் இருந்து எண்ண மங்கலம், வட்டக்காடு, கிருஷ்ணாபுரம், குருநாத புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் செல்வதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே பொதுப்பணி துறையும், மீன்வளத்துறையும் இதனை நேரில் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் அணைக்கு எவ்வளவு மீன் குஞ்சுகள் விட வேண்டுமோ அவற்றை உரிய முறையில் விட்டு மீன்கள் இறப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.
    • இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

    கொடுமுடி:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் படகுடா பகுதியை சேர்ந்தவர் சோட்டுக்குமார். இவரது மனைவி அனிதாடிகள். இவர்களுக்கு லதிக்குமார் (5) என்ற மகன் உள்ளான்.

    சோட்டுகுமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மலையம் பாளையம் அடுத்த கணபதிபாளையத்தில் உள்ள சிமெண்ட் கல் அறுக்கும் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    சோட்டு குமாருடன் அவரது மனைவியும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த கம்பெனியில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களின் மகன் லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சோட்டுகுமார் மற்றும் அவரது மனைவி மகனை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்ப தாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சோட்டுகுமார் மனைவியுடன் சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் அவர்களது மகன் மிதந்து கொண்டு இருந்தான். இதை கண்டு அவர்கள் அலறி துடித்தனர். இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லதிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரி சோதித்த டாக்டர்கள் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மலை யம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விளையாடிய போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    பவானி:

    அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் மக்காச்சோளம் ஏற்றி வந்த அந்த வாகனங்களின் மறைவாக 1475 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளில், குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்பு டைய பவானி அந்தியூர் ஜங்ஷன் சோதனைசாவடி வீதியை சேர்ந்த அருண் (36), திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் களஞ்சியம் என்கிற வஜ்ரவேல் (53), பவானி மயிலம்பாடி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (48), கர்நாடக மாநிலம் சி.எம்.நகரை சேர்ந்த ரமேஷ் (60), ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த திருப்பதி (32), கடத்தூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் (35) மற்றும் சத்தியமங்கலம் கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற கவுதம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் 1475.5 கிலோ பறிமுதல் செய்தனர்.

    இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுபடி பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்க ளாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 934 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் ஒரு வீட்டின் முன்பு கட்டியிருந்த காளை மாட்டை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு, செப். 11-

    ஈரோடு டவுன் போலீசார் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மாட்டுடன் சென்று கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த காட்டச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோகுல் (23) என்பதும், ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டின் முன்பு கட்டியிருந்த காளை மாட்டை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    இந்த மாட்டின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாட்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கோகுல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

    • சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. விழாைவயொட்டி முருக பெருமானு க்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவில் முருகப்பெரு மான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. முன்தாக சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.

    விழாவில் சென்னிமலை, காங்கயம், வெள்ளோடு, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் சென்னிமலை டவுன் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணி வித்தனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
    • பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது.

    பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டிருந்தது. எனினும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலே நீடித்து வந்தது.

    இந்நிலையில் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 4,100 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,800 கன அடியாக உயர்ந்தது.

    மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,400 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணைத்தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர்.
    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேப்போல் இன்றும் கருங்கல்பாளையம் மற்றும் கிருஷ்ணன்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இந்நிலையில் பொது மக்களுக்கு தரமான இறைச்சிகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன், மற்றும் சுகாதார அலுவலர்கள் இன்று அதிரடியாக கருங்கல்பாளையம் மற்றும் கிருஷ்ணன் பாளையம் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளுக்கு சென்று சோதனை மேற் கொண்டனர்.

    ஒவ்வொரு இறைச்சிக்கடையாக சென்று இறைச்சிகளை தனித்தனியாக சோதனையிட்டனர். மேலும் இறைச்சிக்கூடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சில இறைச்சி கடைகளில் இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்கு வைத்திருந்ததை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

    இவ்வாறாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் இறைச்சிக்கடை காரர்களிடம் அறிவுரைகள் வழங்கினர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×