கொரோனா பாதிப்புடன் 211 பேருக்கு சிகிச்சை

சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்புடன் 211 பேருக்கு சிகிச்சை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்க ளாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 934 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com