search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "has started"

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது
    • அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார்

    ஈரோடு

    நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2875 பேலட் யூனிட்களும், 2184 கட்டுப்பாட்டு எந்திரங்க ளும், 2724 விவிபேட் எந்திரங்களும் என 7,783 எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த வாரம் பெங்களூரில் இருந்து 1400 பேலட் யூனிட்டுகளும், ஆயிரம் கண்ட்ரோல் யூனிட்டுகளும் திருச்சியில் இருந்து 700 விவி பேட் எந்திரங்களும் என 3100 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தம் 10883 எந்திரங்களின் சரிபார்க்கு ம் பணி இன்று தொட ங்கியது.

    ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த எந்தி ரங்கள் அனைத்தும் சரி பார்க்கும் முதல் கட்ட பணிகள் இன்று தொடங்கி யது.

    அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும் போது,

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் முதல் கட்டமாக சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறும் என்றார்.

    • விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொது த்தேர்வு நிறைவடை ந்துள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    விடைத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் மாமரத்து பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பா ளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளி யில் சேகரித்து வைக்கப்ப ட்டுள்ளது.

    குலுக்கல் முறை யில் விடைத்தாள்கள் வெவ்வேறு மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்க ப்பட்டு ள்ளது. அதேபோல் பிற மாவட்ட விடைத்தா ள்கள் ஈரோடு மாவட்டத்தி ற்கு வந்துள்ளது.

    இந்து கல்வி நிலையம், எஸ்.வி.என் பள்ளி, பாரதி வித்யாலயா பள்ளி மைய ங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை யினர் கூறியதாவது:

    பிளஸ்-2, அதைத்தொ டர்ந்து பிளஸ்-1 விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. 12 நாட்க ளில் ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெறும். இந்த பணியில் ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
    • ரூ.5. 30 கோடி மதிப்பில் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆடி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலில் ரூ.5. 30 கோடி மதிப்பில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் வனப்பத்திரகாளி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதாகல்யா ணசுந்தரம், பரம்பரை அரங்காவலர் வசந்தா சம்பத், தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
    • முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை.

    சென்னிமலை:

    ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.

    ஏலத்தை விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 105 வாழைத்தா ர்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் செவ்வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 35 ரூபாய்க்கும், தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 10 ரூபாய்க்கும்,

    அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கும், பச்சை வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும்,

    ரஸ்தாளி வாழை குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,075 கிலோ எடையுள்ள வாழைத்தார்கள் ரூ.10 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    முதன்முதலாக தொடங்க ப்பட்ட வாழைத்தார் ஏலத்தில் விலை குறைவாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது குறித்து ஈரோடு வேளாண் விற்பனைக்குழு அலுவல ர்கள் கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்திருந்த னர்.

    ஆனாலும் விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்ததால் வியாபாரிகளும் குறைவாக வந்தனர்.

    முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இனிவரும் வாரங்களில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

    • பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது
    • 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்கால் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் கரைகள் பழமை காரணமாக ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக அமைக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    இந்நிலையில் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நேற்று முன்தினம் மாலையில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது.

    இந்த தண்ணீர் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீர் ஓடை வழியாக இடது புறக்கரைக்கு சென்றதால் அங்கும் உடைப்பு ஏற்பட்டது.

    வாய்க்காலில் 1300 கன அடி நீர் சென்று கொண்டிருந்ததால் உடைந்த இரு கரைகளில் இருந்தும் வெளியேறிய தண்ணீர் வெள்ளத்தைப் போல விளை நிலங்கள் வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பாலப் பாளையம், சின்னியம் பாளையம், கூர பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், வாழை, கரும்பு , தென்னை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் இந்த ஊர்களில் செல்லும் தார் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் விலை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் வடிய தொடங்கி உள்ளது. நேற்று கரை உடைப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி இன்னும் 10 நாட்களுக்குள் வாய்க்கால் கரை உடைப்பு சீரமைக்கப்படும் என்றார்.

    இந்நிலையில் இன்று முதல் வாய்க்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணி துறையினர் அங்கு முகாமிட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் நேற்று இரவுவே வரவழைக்கப்பட்டு உள்ளன.  

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகன ங்கள் முகாமிற்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறை வடைகிறது. எனவே இன்று நடந்த சிறப்பு முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

    • இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ×