என் மலர்
ஈரோடு
- விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம்.
- இந்த ஆய்வில் ‘ரேட்டால்” மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த 'ரேட்டால்" என்ற எலி மருந்தானது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக்கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். 'ரேட்டால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் 'ரேட்டால்" மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'ரேட்டால்" ஈரோடு மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கான கைபேசி எண்கள் வேளாண்மை உதவி இயக்குநர்(தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) - 88702 88416, அம்மாபேட்டை- 99526 97911, அந்தியூர் - 89734 54034 , பவானி - 94430 30302, பவானிசாகர் - 94451 84161,
சென்னிமலை - 94881 40401, ஈரோடு - 99651 29925, கோபி - 99949 72470 ,கொடுமுடி - 99764 80379 , மொடக்குறிச்சி - 99764 95153, நம்பியூர் - 73735 10591 , பெருந்துறை - 96595 47577, சத்தி - 83445 32481 , தாளவாடி - 63823 42149, டி.என்.பாளையம் - 80752 41292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து அந்த பஸ் இன்று காலை கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அரசூர் பகுதி யில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது.
- வேறு பஸ் வர வழைக்கப்பட்டு மாற்று பஸ்சில் பயணிகளை ஈரோட்டுக்கு அனுப்பி ைவக்கப்பட்டனர்.
கோபி:
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டு க்கு ஒரு அரசு பஸ் கோபி செட்டிபாளையம் வழியாக வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஈரோட்டை சேர்ந்த சின்னசாமி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக ரவி என்பவர் இருந்தார். இந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பஸ் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த பஸ் இன்று காலை கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அரசூர் பகுதி யில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது பஸ்சில் வந்த ஒரு பெண் சீட்டில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதை கண்ட மற்றொரு பெண் டிரைவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கி றீர்கள். மெதுவாக செல்ல வேண்டியது தானே என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து மனம் உடைந்த டிரைவர் பஸ்வை கோபிசெட்டி பாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு பஸ்சை நிறுத்தி விட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் சகிச்சை பெற்று வருகறார்.
இதனால் பயணிகள் போலீஸ் நிலையம் அருகே தவித்தனர். போலீசார் பயணிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை சமா தானம் செய்தனர். இதை யடுத்து வேறு பஸ் வர வழைக்கப்பட்டு மாற்று பஸ்சில் பயணிகளை ஈரோட்டுக்கு அனுப்பி ைவக்கப்பட்டனர்.
இதனால் இன்று காலை அந்த பகுதி யில் பரபரப்பான நிலை உருவானது.
- கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 192 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,305 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் சம நீதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
- உலக அரங்கில் இந்தியா வின் மரியாதை பெருமளவு உயர்ந்துள்ளது.
ஈரோடு:
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த சோலார் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்கினார். சரஸ்வதி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் முருகா னந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அண்ணா மலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் சம நீதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் 16-வது பெரிய நாடாக இருந்த இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.
2024-ம் தேர்தலில் 400 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்பார்.தமிழ கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பெறுப்பேற்பார்கள்.
உலக அரங்கில் இந்தியா வின் மரியாதை பெருமளவு உயர்ந்துள்ளது.
இந்திய பிரதமரை விலைக்கு வாங்க முடியாது என அமெரிக்காவிற்கு புரிந்து விட்டது. அதனால், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க. வின் முதல் 5 ஆண்டுகளில் நாட்டை சமநிலைப்படுத்தும் பணியில் மோடி ஈடுபட்டார். மின்சாரம், கழிப்பறை, சமையல் எரிவாயு, பெண்களுக்கு எரிவாயு என அனைத்தும் மக்களுக்கு கிடைத்தது.
இரண்டாவது 5 ஆண்டு களில் காஷ்மீர் பிரச்சி னைக்கு தீர்வு கண்டார். தற்போது பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் நேரம் வந்ததால் பிரதமர் அதனை கையில் எடுத்து விட்டார்.
பொதுசிவில் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் முதல்வர் ஸ்டா லின் பேசுகிறார். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கார் பேசியதன் தமிழாக்கத்தை ஒரு லட்சம் பிரதி எடுத்து ஸ்டாலினுக்கு அனுப்பவுள்ளோம்.
பொதுசிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கு உண்மையான அங்கீகா ரத்தைக் கொடுக்கும்.
முதல்வர் தனது கோபத்தை தீர்க்க பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்யத் தொடங்கியுள்ளார். பா.ஜ.க. தொண்டர்கள் இதைக் கண்டு அஞ்சப்போவ தில்லை. கட்சி வளர்ச்சிக்கே கைது நடவடிக்கைகள் உதவுகிறது. எத்தனை கைது நடவடிக்கைகள் வந்தாலும், 2024-ல் மோடி ஆட்சி வரு வதை தடுக்க முடியாது.
புதிய பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை வெளி ப்படுத்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு முதலில் தேவாரம் தான் ஒலித்தது. இதிலும் மத அரசியல் செய்ய பார்த்தார்கள். இனிமேல் ஜாதி, மத அரசியல் எடுபடாது.
ஈரோடு மாவட்டத்துக்கு என தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற ப்படவில்லை. திமுக ஆட்சியைப் பொறுத்தவரை 10-க்கு பூஜ்யம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த ராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (50). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ருத்ரேஷ் (20) என்ற மகனும் தக்ஷனா (14) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையம் பகுதியில் வரதராஜன் வந்து போது எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வரதராஜனுக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே வரதராஜன் பலியானார். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் வரதராஜனின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
- கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ். நகர், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி(50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரி மங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தரநீஸ் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், மற்றும் 2 கார்கள், ரூ.1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
- வனத்துறையினர் ஆடுகளைக் கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்த்து ஆய்வு செய்தபின் சிறுத்தை என உறுதி செய்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்று வருவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளித்திருப்பூர் குரும்பனூர்காடு பகுதியில் பழனிச்சாமி என்பவரது தோட்டம் சென்னம்பட்டி வனச்சரக்கத்தை ஒட்டியுள்ளது. அங்கு அவரது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 வெள்ளாடுகள் காணவில்லை.
இதையடுத்து அருகே உள்ள தோட்டத்தில் தேடியபோது காட்டிற்குள் மர்ம விலங்கு ஆடுகளை ஆங்காங்கே கடித்து உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டனர்.
வனத்துறையினர் ஆடுகளைக் கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்த்து ஆய்வு செய்தபின் சிறுத்தை என உறுதி செய்தனர்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆட்டை கடித்துக் கொன்ற பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் ஆட்டை கட்டி வைத்து உள்ளனர்.
- தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன.
- தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும், இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகத்தில் மனு, கோரிக்கை அட்டைகள் ஏந்தி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே குவியத்தொடங்கியது.
தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன. உடனடியாக தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி முன்னிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளான ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பு, எல்.பி.எப். கோபால், ஆதித்தமிழர் தொழிற்சங்கம் மாரியப்பன், எல்.பி.எப். கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், சம்பளம் தொடர்பான குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை விபரங்களை தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர். இதையடுத்து 8 நாட்களாக நீடித்து வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நிர்மல்குமார் மது போதையில் இருந்ததால் அவருடைய சகோதரர் நிதிஷ் பஸ்சை ஓட்டி வந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிர்மல்குமாரை கைது செய்தனர்
பு.புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சுல்தான் ரோட்டை சேர்ந்த வர் நிர்மல் குமார். இவர் தனியார் கல்லூரியின் பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
கல்லூரி விடுமுறை என்பதால் அந்த கல்லூரி பஸ்சை நிர்மல்குமார் மற்றும் இவரது சகோதரர் நிதிஷ் ஆகிய இருவரும் எடுத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிர்மல்குமார் மது போதையில் இருந்ததால் அவருடைய சகோதரர் நிதிஷ் பஸ்சை ஓட்டி வந்தார்.
ெதாடர்ந்து புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாலம் அருகே கல்லூரி பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டை விட்டு கீழே இறங்கி பள்ளத்துக்குள் இழுத்துச் சென்று சிறிது தூரம் சென்று நின்றது.
மேலும் கல்லூரி பஸ்சில் யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதில் கல்லூரி பஸ்சின் முன்பகுதி சேதம் அடை ந்தது. இதையடுத்து அவர்கள் பஸ்சை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் நிர்மல் குமார் தனது அம்மாவுடன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து நிர்மல்குமார் அவருடைய தாய் மற்றும் தந்தை இரு வரையும் தகாத வார்த்தை பேசி தாக்கியதாக கூறப்படு கிறது. மேலும் அவர் தாய்-தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் பு.புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிர்மல்குமாரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
- அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47).மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கத்தி முனையில் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை முகமூடி அணிந்த மருமநபர் பறித்து சென்றார்.
இதையடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்தியூர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றார்கள். ஏனெனில் திருட்டு சம்பவம் நடைபெற்ற உடன் டீ கடையில் டீ குடிப்பது போல் அங்கு சென்று அமர்ந்து விடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதால் டீக்கடை உரிமையா ளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்
- மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
பெருந்துறை
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமை களில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக்கொப்பரைகள் 1,947 மூட்டைகள் வர பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 70-க்கும், அதிகபட்சமாக ரூ. 79.20-க்கும் விற்பனையாகின. 2-ம் தரக்கொப்பரைகள் 1,696 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 74.09-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
- ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
கோபி
கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியை சேர்ந்த தீபா (34), அளுக்குளி குட்டிமூலை காடு பகுதியை சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் முதல்வீதியை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






