search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 people were arrested"

    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    • அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை, திருவேங்கடம்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெருந்துறையில் இருந்து திருவேங்கடம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (55), பிரதீப் (27), சுந்தரமூர்த்தி (21), அஜித் (25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ. 2,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடி அடுத்த காரலவாடி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (45), குருசாமி (55), சாந்தப்பா (48), குருசாமி (40), சிவசங்கரா (42) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 700 பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    ×