அனுமதி இன்றி மது விற்ற 9 பேர் கைது

அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்
அனுமதி இன்றி மது விற்ற 9 பேர் கைது
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com