search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People tried to"

    • மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்
    • குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித் திருப்பூர் அடுத்த மொசக்கவுண்டனூர் பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடி நீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத் ததும் அந்தியூர் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுசு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் 100-க்கும் றே்பட்டவர்கள் குடும்ப த்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் கடும் அவதி வருகிறோம். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் போலீசார் கேட்டனர். அப்போது அம்மாபேட்டை- மொசக்கவுண்டனூர் செல்லும் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் வேலை நடந்து வருவதால் அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாயில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இது விரைவில் சரிசெய்யப்ப டும் என்றனர்.

    இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் இந்த பகுதிக்கு குடிநீர் கிடைக்க உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×