பணம் வைத்து சூதாடிய கர்நாடகா வாலிபர்கள் 10 பேர் கைது

பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேர் கைதுரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல்
பணம் வைத்து சூதாடிய கர்நாடகா வாலிபர்கள் 10 பேர் கைது
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

அப்போது பசுவேஸ்வரா கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உல்லாஸ் (27), மகாதேவசவாமி (32), சங்கரா (37), மகந்தேஸ் (29), மகாதேவசாமி (34) அஞ்சு (30), ஹர்தான் (24), சந்தான், ஹரிஷ் (29), மகேஷ்(46) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் பங்களா புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பங்களாபுதூர் அடுத்த கொண்டையம் பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சக்திவேல்(37), சந்திர மூர்த்தி (51), கணேசன் (62), உதயகுமார் (52), முருகே சன், சதீஷ்(28) ஆகியோரை பங்களப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.600 ரொக்க பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

X

Maalai Malar
www.maalaimalar.com