என் மலர்
நீங்கள் தேடியது "Studen"
- மருத்துவ குழுவினர் வந்து மாணவியை சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சாலையை சேர்ந்தவர் சங்கர் (51) டெய்லர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று கொண்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
சங்கரின் இளைய மகள் ஹர்சினி (16). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். நாளை துணைத் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் ஹர்சினி நேற்று வீட்டில் அவரது ஆண் நண்பருடன் இருந்துள்ளார்.
அப்போது சங்கர் வீட்டிற்கு வந்ததை பார்த்து ஹர்சினியின் ஆண் நண்பர் அங்கிருந்து வெளியே ஓடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர், ஹர்சினியை அடித்து விட்டு அவரது ஆண் நண்பர் பற்றி விசாரிக்க சென்றார்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது, ஹா்சினி வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து மாணவியை சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






