என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    சென்னிமலை

    சென்னிமலை டவுன் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்று கண்காணித்து வந்தார்.

    அப்போது சந்தைப்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் சென்னிமலை டவுன் பகுதி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது.
    • திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் மாலையில் குறைந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மாலை 6 மணி அளவில் திடீர் என பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கியது. மழை ஒரு மணி நேரம் நீடித்தது.

    பலத்த சூறைக்காற்றால் சென்னிமலை-அரச்சலூர் ரோடு காளிக்காவலசு பிரிவில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. சென்னிலை மலை அடிவாரப்பகுதி மற்றும் சென்னிமலை-ஈங்கூர் ரோடு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.

    சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது. இதில் வீடுகளும் சேதமடைந்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் கொடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

    இதனால் 9-வது வார்டு பகுதி மற்றும் சென்னிமலை மீதுள்ள முருகன் கோவிலிலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    இன்று காலை முதல் மின் கம்பங்களை அகற்றி புது மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.35 அடியாக சரிந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.35 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 219 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,305 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. 

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,

    தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,

    பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.
    • ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடை ந்ததால் கடந்த வாரத்தில் இருந்து மீன்கள் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மீன் மார்க்கெட்டுக்கு மேலும் மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது . மீன்கள் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1200 வரை விற்கப்பட்டது. இன்று விலை குறைந்து ஒரு கிலோ வஞ்சரம் ரூ.900-க்கு விற்க ப்படுகிறது.

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    அயிலை-300, மத்தி- 250, வஞ்சரம்- 900, விளா மீன்- 350, தேங்காய் பாறை - 500, முரல் -350, நண்டு -400, ப்ளூ நண்டு -750, இறால் -700, சீலா -600, வெள்ளை வாவல் - 900, கருப்பு வாவல் - 850, பாறை - 500, மயில் மீன்- 800, பொட்டு நண்டு - 450, கிளி மீன் - 600, மதன மீன்- 500, மஞ்சள் கிளி- 600, கடல் விலாங்கு- 300, திருக்கை- 400. பெரிய திருக்கை-500, நகர மீன்-450, கடல் வாவல்-60.

    • இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும்.
    • இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது.

    ஈரோடு:

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும். ரெயில் நாளை முழு வதும் ரத்து செய்ய ப்படுகிறது.

    இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரெயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்ய ப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.
    • இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வன ப்பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் பர்கூர் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.

    இதனால் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்ேபாது வனப்பகுதி யில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிய வில்லை.

    மேலும் இறந்த மூதாட்டி விறகு எடுத்து வருவதற்காக வனப்பகுதிகளுக்குள் சென்ற போது வன விலங்குகள் ஏதேனும் தாக்கி உயிரிழந்து விட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர ரேசன் கடை மற்றும் நடமாடும் ரேசன் கடைகளின் முதல் விற்பனையை ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேற்கு மலை தம்முரெட்டி, கொங்காடை பெரியூர் பகுதியில் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர ரேசன் கடை மற்றும் நடமாடும் ரேசன் கடைகளின் முதல் விற்பனையை ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில்.சி.எஸ்.ஆர்.சண்முகம், வருவாய்த்துறை விஜய லட்சுமி,பர்கூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் ராமதாஸ், கவுன்சிலர் புட்டன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பா ளர் மாதேஷ், மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், மாதேஷ், கொங்காடை மாதேவன்,

    அப்பை யன், பெஜில் பாளையம் சின்னப்பிசித்தலிங்கம், ஒன்னழகன், மாதேவன், தொள்ளி மாதேவன், ஊசிமலை சண்முகம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
    • கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது.

     ஈரோடு:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் ஒரு சில மளிகை கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அளுக்குளி கொள்ளுமேடு காலனி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சென்று சோதனை நடத்தி னர்.

    அப்போது கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடையில் இருந்து 10 ஆன்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
    • இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் கொங்கனபாளி யை சேர்ந்தவர் ராமசாமி (54). காவலாளி. இவர் கடந்த மாதம் 13-ந் தேதி முத்தம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்தார்.

    அப்போது அவர் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் காயம் அடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்சு மூலமாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • பாராட்டு விழா ஆவின் நிறுவன வளாகத்தில் பொது மேலாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • மேளதாளங்கள் முழங்க குடைப் பிடித்தபடி ஆவின் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அம்மாபேட்டை:

    சித்தோடு ஆவின் நிறுவனத்தில் 2 மேலாளர்கள் உட்பட 8 ஊழியர்கள் ஒரே நாளில் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.பணி நிறைவு பெற்ற இவர்களுக்கு சக அதிகாரிகள், அலுவலர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    ஆவின் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் (உற்பத்தி) ஏ.சுப்பிரமணியன், உதவி பொது மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஏ.சுப்பிரமணியம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குமரேசன், கணேசன், தனபால், ராமசாமி, மணிமேகலை, மேனகா ஆகியோர் பணிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று பணி ஓய்வு பெற்றனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா ஆவின் நிறுவன வளாகத்தில் பொது மேலாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஊழியர்களை பாராட்டி ஆவின் நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான என்.ஆர்.கோவிந்தராஜர் பேசினார்.

    அப்போது ஓய்வு பெரும் ஊழியர்களின் மனைவி,கணவன் மற்றும் பிள்ளைகளே உங்களுக்காகவும் உங்கள் வாழ்வின் உயர்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் உழைத்த இவர்களை ஓய்வுக்கு பின் மனம் கோணாமல் அன்பாகவும் பண்பாகவும் பணிவாகவும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் பெரிய கடமையாகும் என அறிவுரை கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.ஆர்.ராமலிங்கம், நிர்வாகிகள் பழனிச்சாமி, அன்பழகன், குணசேகரன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் மாலை அணிவித்து,பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேளதாளங்கள் முழங்க குடைப் பிடித்தபடி ஆவின் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×