search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A wild elephant"

    • ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள தடாகம், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே இங்கு காட்டு விலங்குகள் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி, ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஒரு காட்டு யானை அதிகாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது அது ஆக்ரோஷமாக காட்சியளித்தது.மாங்கரை குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானை, அங்கு உள்ள சோதனைச்சாவடியை உடைத்து சேதப்படுத்தியது.

    அதன்பிறகு டாஸ்மாக் கடை சுவரையும் தாக்கி இடிக்க முயன்றது. மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கோவை தடாகம் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் ஊருககுள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் ஊருக்குள் வலம் வந்து அட்டகாசம் செய்து விட்டு திரும்பி சென்று உள்ளது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கோவை தடாகம் மாங்கரை பகுதியில் தனியாக வலம் வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துறை பிடித்து நடுக்காட்டில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
    • வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது

    ஈரோடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் வசித்து வருகின்றன. வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த வழியாக கரும்பு க்கட்டுகளை ஏற்று செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சமீப காலமாக யானைகள் ருசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடு ஞ்சாலையில் நடமாடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    திடீரென சாலை நடுவே காட்டு யானை நட மாட்டத்தை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சிறிது தொலைவிலேயே வாகன ஓட்டிகள் நிறுத்தினர். சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலை யில் அங்கும் இங்குமாக சுற்றிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. சாலையோர வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் போது வாகனங்களில் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவி ர்க்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    • கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.
    • ரேஷன் கடை வளாகத்தின் இரும்பு நுழைவு வாயிலை உடைத்தது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே நெலாக்கோட்டை, விலங்கூர், கூவச்சோலை, விலங்கூர், 9-வது மைல், மேபீல்டு, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெலாக்கோட்டை பஜாருக்குள் ஒற்றை யானை புகுந்தது. தொடர்ந்து வீடுகளையும், கடைகளையும் முற்றுகையிட்டது.

    இதையடுத்து நெலாக்கோட்டையில் இருந்து கரியசோலை செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை வளாகத்தின் இரும்பு நுழைவு வாயிலை உடைத்தது. பின்னர் உள்ளே சென்று ரேஷன் கடையை உடைக்க முயன்றது.

    அதற்குள் தகவல் அறிந்து வந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் மீண்டும் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சேதம் அடைந்த நுழைவு வாயிலை பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரகுமார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.

    • வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன.
    • காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடித்த வண்ணம் உள்ளது.

    தற்போது பலாப்பழ சீசன் என்பதால் முள்ளூர் பகுதியை சுற்றியுள்ள பலா தோட்டங்களில் பலாப்பழங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இதனால் இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன. மாதக்கணக்கில் அப்பகுதியிலேயே சுற்றிவந்த காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.

    பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில் இப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை பார்க்க வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்ற னர்.

    இதேபோல் நேற்று மாலை முள்ளூர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை படம்பிடிக்க சுற்றுலா பயணிகள் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி யானையின் மிக அருகில் சென்றனர். அந்த யானை அவர்களை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.

    சுற்றுலா வரும் பயணிகள் எந்த இடங்களில் யானைகள் இருக்கிறது என்பது தெரியாமல் சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றிப்பார்க்க சென்று விடுகின்றனர். எனவே யானைகள் உலா வரும் இது போன்ற பகுதிகளில் வன பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.
    • பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமதையனூர், கட்டாஞ்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று புங்கம்பாளையம் பகுதிக்குள் ஒற்றை யானை ஒன்று குட்டியுடன் புகுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றது.

    அங்கு ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 50 தென்னை மரங்களையும், பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 250 வாழை மரங்களையும் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.

    மேலும் வாழைகளை தின்றும், காலால் மிதித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து யானை இதுபோன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட மக்கள் கோரிக்கை
    • கூலி வேலைக்கு சென்ற பெண்ணை தாக்கிக் கொன்றது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற மங்கலி என்ற பெண்ணை தாக்கிக் கொன்றது. அதனைத் தொடா்ந்து வாழைத்தோட்டம் கிராமத்தையொட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

    இந்த யானை தொடா்ந்து கிராமப் பகுதிகளை ஒட்டியே சுற்றித் திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். சாலையில் செல்லும் வாகனங்களையும் இந்த யானை துரத்துவதால் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக யானை நடமாட்டம் காணப்படுகிறது. யானை தொடர்ந்து குடியிருப்பையொட்டி சுற்றுவதால் நாங்கள் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×