என் மலர்
ஈரோடு
- மருத்துவ குழுவினர் வந்து மாணவியை சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சாலையை சேர்ந்தவர் சங்கர் (51) டெய்லர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று கொண்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
சங்கரின் இளைய மகள் ஹர்சினி (16). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். நாளை துணைத் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் ஹர்சினி நேற்று வீட்டில் அவரது ஆண் நண்பருடன் இருந்துள்ளார்.
அப்போது சங்கர் வீட்டிற்கு வந்ததை பார்த்து ஹர்சினியின் ஆண் நண்பர் அங்கிருந்து வெளியே ஓடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர், ஹர்சினியை அடித்து விட்டு அவரது ஆண் நண்பர் பற்றி விசாரிக்க சென்றார்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது, ஹா்சினி வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து மாணவியை சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் தாக்கி ஆண் மயில் பரிதாபமாக இறந்தது
- வனத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.
ஈரோடு,
ஈரோடு, சங்க நகர் 7-வது வீதி, தென்றல் நகரில் இன்று காலை ஆண் மயில் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயரில் ஆண் மயிலின் தோகை எதிர்பாராத விதமாக பட்டது.
இதனை அடுத்து மின்சாரம் தாக்கி ஆண் மயில் கீழே விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆண் மயில் பரிதாபமாக இறந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.
- ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
- அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த தஞ்சாங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
கடந்த இரண்டு வருடமாக கவுசல்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முத்துசாமி அவ்வப்போது தனது மனைவி, மகனை பார்த்து வந்துள்ளார். கவுசல்யாவின் தாய் தனது மகள், மருமக னிடம் நீங்கள் கவுந்தப்பாடி யில் போய் குடியேருமாறு அறிவுறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று கவுசல்யாவின் தாய் மற்றும் அவரது அண்ணன் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கவுசல்யா மற்றும் அவரது 2 வயது மகன் மட்டும் இருந்தனர். வெளியே சென்ற அவரது தாய் மற்றும் அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் வெளியே கவுசல்யா மகன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது தாய் கதவைத் தட்டி உள்ளார்.
ஆனால் பதில் வரவில்லை. உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வெள்ளோ ட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவி த்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்
- குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித் திருப்பூர் அடுத்த மொசக்கவுண்டனூர் பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடி நீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.
இது பற்றி தகவல் கிடைத் ததும் அந்தியூர் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுசு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் 100-க்கும் றே்பட்டவர்கள் குடும்ப த்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் கடும் அவதி வருகிறோம். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் போலீசார் கேட்டனர். அப்போது அம்மாபேட்டை- மொசக்கவுண்டனூர் செல்லும் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் வேலை நடந்து வருவதால் அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாயில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இது விரைவில் சரிசெய்யப்ப டும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் இந்த பகுதிக்கு குடிநீர் கிடைக்க உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- தக்காளி விலை விண்ணை தொடும் அளவு உச்சம் அடைந்து வருகிறது
- காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை குறைந்த காய்கறிகளை மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு மேட்டுப்பாளையம், திருப்பூர், ஓசூர், கிருஷ்ண கிரி, மேச்சேரி, ராசிபுரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கொடை க்கானல், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. கடந்த சில நாட்களா கவே காய்கறிகள் விலை திடீரென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக தக்காளி விலை விண்ணை தொடும் அளவு உச்சம் அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது தான். நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று வ.உ.சி. மார்க்கெட்டுக்கு 2000 தக்காளி பெட்டிகள் வரத்தானதால் தக்காளி விலை நேற்றை விட கிலோ ஒன்றுக்கு ரூ. 20 குறைந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகி றது. சுமாரான தக்காளிகள் ஒரு கிலோ ரூ.90 -க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் ஓரளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ் கேரட், இஞ்சி, சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இதனால் முன்பு காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கி சொல்லும் மக்கள் தற்போது குறைந்த அளவில் 200, கால் கிலோ என்ற அளவில் வாங்கி செல்கின்றனர். இன்று வ.உ.சி. மார்க்கெட்டுக்கு 80 டன்கள் காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று மா ர்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பீட்ரூட்-60, கேரட் - 80, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 130, பச்சை மிள காய் - 120, சவ்சவ் - 30, பீன்ஸ் - 130, வெண்டை க்காய் - 30, கத்திரிக்காய் - 60, பாவக்காய்-60, பீர்க்கங்காய் - 70, புடல ங்காய் -70, இஞ்சி-230 - 250, முருங்கை க்காய் - 50, உருளைக்கிழங்கு - 35, முட்டைகோஸ் - 30, காலிங் பிளவர் -40, சின்ன வெங்காயம்-80-90, பெரிய வெங்காயம் - 30.
காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை குறைந்த காய்கறிகளான வெண்டை க்காய், புடல ங்காய் சுரக்காய், போன்ற காய்கறி களை மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
- கந்தசாமி மொபட்டில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்
கோபி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மகனை அழைத்து வருவதற்காக மொபட்டில் புதுக்கரை புதூரில் இருந்து பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றார்.
அப்போது ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேர் கைது
- ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.
அப்போது பசுவேஸ்வரா கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உல்லாஸ் (27), மகாதேவசவாமி (32), சங்கரா (37), மகந்தேஸ் (29), மகாதேவசாமி (34) அஞ்சு (30), ஹர்தான் (24), சந்தான், ஹரிஷ் (29), மகேஷ்(46) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் பங்களா புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பங்களாபுதூர் அடுத்த கொண்டையம் பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சக்திவேல்(37), சந்திர மூர்த்தி (51), கணேசன் (62), உதயகுமார் (52), முருகே சன், சதீஷ்(28) ஆகியோரை பங்களப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.600 ரொக்க பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேன் எடுத்து கொண்டு வந்தேன்.
- சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த சாந்தி (36) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் அந்த பெண் அருகே வந்தார். அப்போது சாந்தியிடம் இருந்து மண்ணெண்ணை வாடை அடித்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்திருந்த பையில் கேனில் 5 லிட்டர் மண்ணெண்ணை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சாந்தியை போலீசார் விசாரணைக்காக வெளியே அழைத்து வந்தார்.
அப்போது சாந்தி போலீசாரிடம் கூறியதாவது:-
நான் விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருகிறேன் எனது கணவர் பெயர் சுகந்தன். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.
எனது கணவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பார்சல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. எனது கணவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.
இந்நிலையில் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய தொடங்கியது. இதை அடுத்து சந்தேகம் அடைந்து நான் விசாரித்த போது எனது கணவர் வேலை பார்க்கும் அதே பார்சல் கம்பெனியில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த விஷயம் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. இது அடுத்து எனது கணவரை கண்டித்தேன். ஆனாலும் அவர் அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தவில்லை. என் கணவருக்கு எனது மாமனார், மாமியார் ஆதரவாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கணவர் எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார். போன் செய்தாலும் எடுப்பதில்லை. எனது மாமனார்-மாமியார் என்னுடன் கணவரை சேர்க்க இடையூறு செய்கின்றனர். நான் தற்போது வாடகை வீட்டில் வறுமையுடன் வசித்து வருகிறேன். என் கணவரும் வருவதில்லை.
இந்நிலையில் எனது கணவர் மற்றும் அவரது அம்மா, அப்பாவுடன் அந்த பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த நான் இதுகுறித்து ஏற்கனவே எஸ்.பி. அலுவலகம், பெருந்துறை போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தேன். இன்று தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணை கேன் எடுத்து கொண்டு வந்தேன். எனக்கு நியாயம் வேண்டும். எனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் அந்த பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (55). ஈரோடு- கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர்கள் 2 பேரும் தொழிலாளர்கள்.
இன்று காலை 11.30 மணி அளவில் இவர்கள் கவுந்தப்பாடி அருகே ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் செம்புத்தம்பாளையம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது கான்கிரீட் கலவை எந்திரம் மோட்டார் சைக்கிளுடன் 2 பேரையும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கான்கிரீட் கலவை எந்திரத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் விருத்தாசம்பட்டியை சேர்ந்த திவ்யநாதன் (40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு
- போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ப னையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்ய ப்பட்டனர். இதை தொட ர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ப னை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடு பட்டது தெரிய வந்தது.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்
- பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சிவசக்தி நகர் பகுதியில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்துக்கு வெள்ளையம்பாளையம் புதுப்பாளையம் அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பா ளையம், பள்ளிய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமா னோர் வந்து புத்தகங்களையும், பொழுதுபோக்கு கதைகளையும் படித்து செல்கிறார்கள்.
இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என வாசகர்கள் ஏராளமானோர் தினமும் வந்து அங்கேயே அமர்ந்து படித்து செல்கிறார்கள். மேலும் பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கேயே அமர்ந்து படித்து செல்லும் பெண்கள்மற்றும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை படித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அங்கேயே மதிய உணவு எடுத்து வந்து படித்து விட்டு பின் வீட்டுக்கு செல்கின்றார்கள்.
அந்த நூலக வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் தேர்வுக்கு படிப்பவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நூலக அமைந்துள்ள பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பஸ் நிலை யத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
எனவே இங்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






