search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renting a house"

    • வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 அழகிகளை மீட்டனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் திரு.வி.க. நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விபசார புரோக்கர்கள் மகாலட்சுமி (51), பிரகாஷ் (47), சங்கர் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 அழகிகளை மீட்டனர். தலைமறைவான கவிதா என்கிற மல்லிகா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் விபசாரம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் விபசாரம் தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடு வாடகைக்கு யாராவது கேட்டால் முழுமையாக விசாரணை நடத்தி வீடுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

    • ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.
    • பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கோவையில் உள்ள தனது வீடு வாடகைக்கு விடப்படும் என்று இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

    மேலும் வீட்டிற்கு முன்பணமாக ரூ. 40 ஆயிரமும், மாத வாடகை ரூ.10 ஆயிரம் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். தங்களது தொடர்பு எண்ணையும் அதில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பை பார்த்த ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது எனது கணவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவர்கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், எனவே எங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.

    மறு நாள் மீண்டும் அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டு வீடு கேட்டு இருக்கிறார். அப்போது எனது கணவர் உங்களிடம் பேச வேண்டும் என்கிறார் என்று கூறி உள்ளார்.

    அப்போது பேசிய அந்த பெண்ணின் கணவர் தனது பெயர் அக்கீத் விஜய் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது அடையாள அட்டையை அனுப்பி வைத்தார்.

    மேலும் தான் கோவைக்கு மாறுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அேதாடு வீடு வாடகை மற்றும் முன் பணம் ெகாடுக்க எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்து உள்ளார்.

    அதை தொடர்ந்து பேசிய அவர் எங்களது வங்கி கணக்கு மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் நேரடியாக நாங்கள் முதலில் உங்களுக்கு பணம் செலுத்த முடியாது.

    எனவே நீங்கள் முதலில் நான் அனுப்பும் க்யூஆர் கோடுக்கு ஸ்கேன் செய்து முதலில் ரூ.1 செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி வீட்டு உரிமையாளரும் ரூ. 1 அனுப்பி உள்ளார். உடனே அவர்களுக்கு மீண்டும் ரூ. 2 திரும்பி வந்து விட்டது.

    இதையடுத்து வீட்டு உரிமையாளர் மீண்டும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ரூ. 45 ஆயிரம் அனுப்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    இதையடுத்து பணம் அனுப்ப சொன்னவரிடம் கேட்ட போது நீங்கள் தவறுதலாக ஏதாவது செய்து இருப்பீர்கள எனவே நீங்கள் முன்பு அனுப்பிய 1 ரூபாய் போக மீதியுள்ள 44 ஆயிரத்து 999 செலுத்துங்கள் மொத்தமாக உங்களுக்கு பணம் திரும்பி வந்து விடும் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என நம்பி மீண்டும் ரு. 44 ஆயிரத்து 999-ஐ செலுத்தினர்.

    ஆனால் ரூ.90 ஆயிரமும் மீண்டும் வரவில்லை. மேலும் அவர் போனையும் எடுக்க வில்லை.

    இதையடுத்து தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து ஈரோடு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து புகார் செய்தார்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்த அவர் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் விசாரணையை ெதாடங்கினார். அப்போது அக்கீம் விஜய் என்பவர் அனுப்பிய போலீஸ் அதிகாரி என்ற அடையாள அட்டை போலியானது என்று தெரியவந்தது.

    இணையதளத்தில் வேறு ஒரு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் படத்தை மாற்றி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    மேலும் எந்த வங்கி கணக்குக்கு இந்த பணம் அனுப்பபட்டது என்று விசாரணை நடத்திய போது அது கேரள மாநிலம் கொச்சினில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு அனுப்ப பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை நடத்திய போது இந்த வங்கி கணக்கு அரியானா மாநிலத்தில் இருந்து ஆன்லைனின் தொடங்கப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் மோசடி நபர் தொடர்பு கொண்ட ஆடியோ மற்றும் செல்போன் எண்ணை கண்காணித்த போது அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ரஷியா என்ற கிராமத்தில் சிக்னல் காட்டியது.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.

    அவர்கள் பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் உதவியுடன் மோசடி நபரின் வீட்டைகண்டு பிடித்தனர்.

    ஆனால் தமிழக போலீசார் வந்ததை தெரிந்து கொண்ட மோசடி நபர் தலைமறைவாகி விட்டார். பின்னர்போலீசார்அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    மோசடி நபரின் வீட்டில் அவரது பெற்றோர் மற்றும் மனைவி மட்டுமே இருந்தனர். அவர்களிடம் மோசடி நபர் குறித்து கேட்ட போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது. அவரது செல்போன் எண்ணும் தெரியாது என்று கூறினர்.

    இதையடுத்து ஈரோடு சைபர்கிரைம் போலீசார் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டனர்.

    பின்னர் அந்தபகுதியை சேர்ந்த சிலர் ராஜஸ்தான் போலீசார் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் நீங்கள் தேடி வந்த நபர் மீது எந்த குற்றமும் இல்லை.

    வேண்டும் என்றால் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறி எப்படி பணத்தை மோசடி செய்தாரோ அதே போல் வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் பணத்தை திருப்பி ெசலுத்தினர்.

    ஆனாலும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்த விபரங்களை ராஜஸ்தான் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து அவர் பற்றிய விபரங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    மேலும் அவரை கண்டுபிடித்து கைது செய்யவும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ராஜஸ்தானில் இருந்த தனிப்படை போலீசாருக்கு ஈரோட்டில் இருந்தபடியே சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ெஜயசுதா, தொழில் நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் மோசடி நபரின் செல்போன் சிக்னல்களை கண்காணித்து தகவல்களை தெரிவித்தனர்.

    மோசடி நபர் பற்றி எந்த தகவலும் தெரியாமலேேய செல்போன் சிக்னலை வைத்தே ஈரோடு சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் சென்று மோசடி நபரின் வீட்டை கண்டுபிடித்து பணத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது.

    தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    ×