பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,659 கனஅடியாக அதிகரிப்பு

மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,659 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நேற்று பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி யாக இன்று பவானி சாகர் அணைக்கு மேலும் வினாடிக்கு 6,659 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com