நகைப்பட்டறை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நகைப்பட்டறை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (55). இவர் பெரியார் வீதியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணனுக்கு சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று தனது நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com