என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டியே கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை
- புளியம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
- கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.
பு.புளியம்பட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பஸ் நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் குழந்தை ளுக்கு பாலூட்டும் தனி அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த பாலூட்டும் அறை தற்போது பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டிரு க்கின்றன.
அதே போல் ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.
இதனால் போதையில் வரும் குடிமகன்கள் பூட்டி கிடக்கும் அறை முன்பு படுத்து தூங்குகிறார்கள். மேலும் இந்த பகுதி குடிமகன்கள் தூங்கும் இடமாக மாறி அவலம் நிலவி வருகிறது.
எனவே பு.புளியம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரி க்கை வைக்கின்றனர்.






