என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் சவண்டப்பூர், அம்மா பாளையம், மேவாணி, பெருந்தலையூர், பொம்மநாய்க்கன் பாளையம், பொலவக்காளி பாளையம், கடுக்காம் பாளையம், சந்திராபுரம் ஆகிய 8 ஊராட்சிகளும், கூகலூர் மற்றும் பி.மேட்டுப்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகளும் அந்தியூர் தொகுதிக்குள் அடங்கியுள்ளது.

    இது சம்பந்தமான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வு கூட்டத்தில் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர வடிவேல், சக்திவேல், ஊராட்சி ஒன்றிய பொறியாளர், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆய்வு கூட்டத்தில் 8 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.

    அதைத்தொடர்ந்து கோபி யூனியனில் உள்ள 21 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும் அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் போதிய கவனம் செலுத்தி வளர்ச்சி பணிகளை முடிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் இது போன்று பணிகள் தொடங்காமல் இருந்தால் அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டு வேறு ஊராட்சிகளுக்கு வழங்கும் நிலை ஏற்படும். அதே போன்று தொடங்கிய பணிகளும் முழுமையாக போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

    அலுவலக அதிகாரிகள் மற்ற ஊராட்சிகளுக்கு பணி வழங்குவது போன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குள் உள்ள 8 ஊராட்சிகளுக்கும் பணிகளை வழங்குவதோடு, விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    • காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணி புரியும் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ண ங்குடியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கன்னங்குடியை சேர்ந்த செல்வா என்கிற செல்வம் (வயது 27), விக்கி என்கிற விக்னேஷ் (வயது 24) ஆகி யோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து இவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரி ப்பதற்காக பலத்த பாது காப்புடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்க ளது சொந்த ஊருக்கு போலீ சார் அழைத்து சென்றனர்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீடுகளில் இன்று கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் அறவழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருேக உள்ள காஞ்சிகோவில் கீழ்பவானி கால்வாயில் 51 மற்றும் 53- வது மைல்களான ஆயப்பரப்பு மற்றும் சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் காத்திருப்பு போராட்டம் செய்தவர்களிடம் கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படாது என உறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் போராட்டக்காரர்கள் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கலெக்டரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து காஞ்சிகோவில் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் அறவழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    • புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.
    • அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழக வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

    இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

    இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்து வருகிறது. நேற்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 138 கன அடி வீதம் கண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலியாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.81 அடியாக சரிந்து உள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது
    • சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை

    ஈரோடு

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெறு கிறது. குறிப்பாக ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை தொடங்கி விடிய, விடிய நடைபெற்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவ டைகிறது.

    இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள். மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    மேலும் ஆன்லைன் மூலமாக வும் ஆர்டர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் ஜவுளி சந்தையில் துணிகளின் விலை குறைவாக விற்கப்படுவதால் இங்கே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஆனி மாதம் பிறந்துள்ளதால் எந்த ஒரு விசேஷமும் இல்லை.

    இதனால் ஜவுளி வியா பாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் இன்று அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை.

    ஆனால் இன்று மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதைப்போல் உள்ளூர் மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவை வந்திரு ந்தனர். சில்லரை வியாபாரம் 15 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரி வித்தனர். இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

    • சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
    • வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது

    ஈரோடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை கள் வசித்து வருகின்றன. வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த வழியாக கரும்பு க்கட்டுகளை ஏற்று செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சமீப காலமாக யானைகள் ருசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடு ஞ்சாலையில் நடமாடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    திடீரென சாலை நடுவே காட்டு யானை நட மாட்டத்தை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சிறிது தொலைவிலேயே வாகன ஓட்டிகள் நிறுத்தினர். சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலை யில் அங்கும் இங்குமாக சுற்றிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. சாலையோர வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் போது வாகனங்களில் வனவிலங்குகள் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவி ர்க்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலை பாதை வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்
    • பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து இந்த வழித்தடத்தை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

    கர்நாடக மாநிலத்திற்கு உரம்மூட்டையை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதை யில் லாரியின் பிரேக் பிடிக்காமல் சாலையின் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி கட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உரமூட்டைகள் அனைத்தும் சாலையில் நடுவே சிதறி கிடந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதனால் பர்கூர் அந்தியூர் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணிக்கு போக்கு வரத்து சீர் செய்யப்பட்டது. சாலையில் சிதறி கிடந்த உரமூட்டைகள் மாற்று லாரியில்ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    போக்குவரத்து சரி செய்யும் வரை பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தங்கவேல் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேர த்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது.மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.லாரிக்கு எத்தனை டன் ஏற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை ஏற்றி மலை ப்பாதையில் வருகிறதா என்று பர்கூர் சோதனை சாவடியிலும் வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியிலும் சோதனை செய்த பின்னரே அனுமதி த்தால் இந்த விபத்துக்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    லாரியில் முறையான எப் சி செய்திருக்கிறார்களா என்று அனைத்தையும் சோதனை செய்த பின் அனுப்பினால் விபத்துக்கள் குறையும்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது
    • அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார்

    ஈரோடு

    நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2875 பேலட் யூனிட்களும், 2184 கட்டுப்பாட்டு எந்திரங்க ளும், 2724 விவிபேட் எந்திரங்களும் என 7,783 எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த வாரம் பெங்களூரில் இருந்து 1400 பேலட் யூனிட்டுகளும், ஆயிரம் கண்ட்ரோல் யூனிட்டுகளும் திருச்சியில் இருந்து 700 விவி பேட் எந்திரங்களும் என 3100 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தம் 10883 எந்திரங்களின் சரிபார்க்கு ம் பணி இன்று தொட ங்கியது.

    ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த எந்தி ரங்கள் அனைத்தும் சரி பார்க்கும் முதல் கட்ட பணிகள் இன்று தொடங்கி யது.

    அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும் போது,

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் முதல் கட்டமாக சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறும் என்றார்.

    • ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.94 அடியாக சரிந்து உள்ளது

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொட ர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.94 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 100 கன அடி நீர் குறைந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. 

    • அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது
    • 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

    ஈரோடு

    பொது இடங்களில் விளம்பர பேனர்களை வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து ள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவ னங்கள், மருத்துவ மனைகள், பொது இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள், ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

    இதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், ஒளிரும் விளக்குகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அதில் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்குப் பிறகும் அவற்றாவிட்டால் மாநகராட்சியின் மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
    • மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பவானி:

    அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிந்து அவரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்து 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் மாணவி- மற்றும் சிறுவனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவன் சிறுமியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட து அது மாயமான பிளஸ்- 2 மாணவி என தெரியவந்தது.

    தொடர்ந்து மாணவியிடம் விசாரித்தபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவன், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் மாணவிக்கு சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ×