விஷ மாத்திரை சாப்பிட்டு முதியவர் தற்கொலை

மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.
விஷ மாத்திரை சாப்பிட்டு முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திங்களூர் கைவெட்டி மல்ல நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் பிரபாகரன் (33).

கடந்த 2 வருடங்களுக்கு முன் ரவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ரவி தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கைவெட்டியூர் செல்லும் வழியில் உள்ள காலி இடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்று பார்த்த போது அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.

உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக உயிரிழ ந்தார்.

இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com