பவானி பகுதியில் சாரல் மழை

பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.
சாரல் மழையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பணியாளர்கள் நனைந்தபடி சென்றனர்.
சாரல் மழையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பணியாளர்கள் நனைந்தபடி சென்றனர்.
Published on

பவானி:

பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நனைந்தபடியே நடந்து சென்றனர்.

அதேபோல் காலை சுமார் 7 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டு இருந்ததால் கிராம பகுதியில் இருந்து நகர பகுதிக்கு பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் நனைந்தபடியே சென்றனர்.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com