என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    சத்தியமங்கலம்:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து இன்று மதியம் 3.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.

    அங்கிருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் எல்.முருகன் பண்ணாரி அம்மனை தரிசித்து விட்டு 4 மணி அளவில் சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கில் நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    • திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வரும் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதலும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தையும், 16-ந் தேதி பால்பூஜையும் நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவில் லட்சக ணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொட ர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைகூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவல கத்தில் ஆர்.டி.ஓ. திவ்யபி ரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்பு த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அறிவுரை வழங்கினார்.

    • மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். கொளத்துப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார்.

    இவரது மகள் அமிர்தவர்ஷினி (23). இவர் ஐ.எம்.எஸ்.சி படித்து விட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அமிர்த்வர்ஷி னி யு.பி.எஸ்.சி. அமலாக்க தேர்வு எழுதி வந்தார்.

    தேர்வு கடினமாக இருந்ததாக அமிர்தவர்ஷினி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில் மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதவை உடைத்து அமிர்தவர்ஷினியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு அமிர்தவர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
    • ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார்.

    இவர் சிவாஜியிடம் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவர் 50 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனக்கு கமிஷனாக ரூ.15 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.35 லட்சத்தை எடுத்து வந்தார்.

    பணத்தை கொண்டு வந்த சிவாஜியிடம் பாண்டி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளார். அதன்படி சிவாஜியும் ராஜ்குமாரிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ராஜ்குமார் பணத்தை ஈரோட்டுக்கு கொண்டு வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து சிவாஜி ஒரு பேக்கில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு வந்தார்.

    மேலும் அவர் தன்னுடன் செந்தில், மாதேஸ்குமார் ஆகியோரை அழைத்து வந்தார். காரை குபேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். சின்னமனூரில் காலை 6 மணிக்கு பணத்துடன் புறப்பட்ட இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் 2 நபர்களுடன் காரில் டீக்கடைக்கு வந்தார். அவர் சிவாஜியை சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம் தனது காரில் இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் சிவாஜி, செந்தில் ஆகியோரை ரூ.35 லட்சம் பணத்துடன் தனது காருக்கு அழைத்து சென்றார். பின்னர் பணத்தை எண்ணி சரிபார்க்கலாம் என்று கூறி பரிசல்துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் அழைத்து சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரை எதிரே வந்த ஒரு கார் வழி மறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை கீழே இறங்க சொன்னார்கள். அவர்களும் காரில் இருந்து இறங்கி னார்கள். பின்னர் காரில் இருந்த ரூ.35 லட்சத்துடன் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த பாண்டியை தேடி சிவாஜி உசிலம்பட்டி சென்றார். அப்போது பாண்டியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    • டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (55). இவர் பெரியார் வீதியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கு சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று தனது நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்தானது.
    • இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஒரு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் காவிலி பாளையம், உக்கரம், பெரியூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்றது.

    இதே போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனி பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றது.

    அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் ஆகியவை பெரியூர் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதே போல் தனியார் பனியன் கம்பெனி பஸ்சின் முன்பகுதியில் சேதமானது.

    இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த வளர்மதி (42), தேவி (49), தனலட்சுமி (43), சரசாள் (35), நாகராஜ் (43), ரங்கம்மாள் (70), கந்தசாமி (48), ஆம்ஸ்ட்ராங் (50) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.
    • சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (29). வெல்டர். இவரது மனைவி சிம்ரான் (28). இவர்களுக்கு 3 வயதில் சையத் அத்னான் என்ற மகன் உள்ளான்.

    சிம்ரான் அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் செயல்பட்டு வரும் பிளா ஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சிம்ரான் வேலைக்கு செல்லும்போது குழந்தை சையத் அத்னானையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றபோது அங்கிருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.

    சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குழந்தையை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டுக்குள் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே முருகன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 58).

    இவர் தினமும் மாலையில் 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்னிமலை அருகே அசோகபுரத்தில் வசிக்கும் தனது மகள் சுதா குடியிருக்கும் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் தனது வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

    வழக்கம்போல் சம்பவத்தன்று மாலை தனது மகள் சுதா வீட்டுக்கு அசோகபுரம் சென்று விட்டு இரவு முத்துலட்சுமி தனது மகள் சுதாவுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டுக்குள் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முகப்பு, மற்றொரு பீரோவை உடைத்து அங்கு வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 4 கடிகாரங்கள், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கேமிரா, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஜோடி வெள்ளி கொலுசு என மொத்தம் ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து முத்துலட்சுமி வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 அழகிகளை மீட்டனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் திரு.வி.க. நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விபசார புரோக்கர்கள் மகாலட்சுமி (51), பிரகாஷ் (47), சங்கர் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 அழகிகளை மீட்டனர். தலைமறைவான கவிதா என்கிற மல்லிகா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் விபசாரம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் விபசாரம் தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடு வாடகைக்கு யாராவது கேட்டால் முழுமையாக விசாரணை நடத்தி வீடுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

    • புளியம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
    • கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.

    பு.புளியம்பட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள பஸ் நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் குழந்தை ளுக்கு பாலூட்டும் தனி அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த பாலூட்டும் அறை தற்போது பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டிரு க்கின்றன.

    அதே போல் ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.

    இதனால் போதையில் வரும் குடிமகன்கள் பூட்டி கிடக்கும் அறை முன்பு படுத்து தூங்குகிறார்கள். மேலும் இந்த பகுதி குடிமகன்கள் தூங்கும் இடமாக மாறி அவலம் நிலவி வருகிறது.

    எனவே பு.புளியம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரி க்கை வைக்கின்றனர்.

    • ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். அவர் பவானி பூக்கடை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வரு கிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படு கிறது. இதை தொடர்ந்து அவர் நள்ளிரவு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் கிடைக்க வில்லை. இது குறித்து பவானி போலீ சில் சபாநாயகன் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பவானி சப்- இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பாப்ப ம்பட்டி சோழவண்டி வளவு கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் (24) என்பதும் பவானி பூக்கடை வீதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. வெல்டர் தொழில் செய்து வரும் சக்திவேல் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திரு ட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர். இதை தொடர்ந்து சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கோடேபாளையத்தில் பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர்.
    • 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூலமாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி அடுத்த தொப்ப ம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடே பாளை யத்தில் 12-வது வார்டு பகுதியில் வீடு இல்லாத வர்களுக்கு காலி மனை இடம் கேட்டு பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டாக மனு கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தலைமையில் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பட்டா கேட்டு பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டனர்.

    மேலும் கோடேபாளையத்தில் பட்ட கேட்டு 100-க்கும் மேற்பட்ட வர்கள் போரா ட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்து க்கு வந்து பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரி கள் மற்றும் போலீசார் கூறும் போது, நீங்கள் கேட்கக் கூடிய இடம் பாது காப்பானது அல்ல. எனவே மாற்று இடம் தருகிறோம் என்று அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் எங்க ளுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாரதி ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்குவதாக உத்திரவாதம் கொடுத்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூல மாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் சண்முகம் மற்றும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×