என் மலர்
நீங்கள் தேடியது "Thesilali"
- நரேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நைக்கான் காடு, கண்ணகி தெருவை சேர்ந்தவர் நரேஷ் குமார் (39). கேட்டரிங் மற்றும் சமையல் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வயிற்று வலியை தாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்தார்.
இதனையடுத்து நரேஷ்குமாருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
அவரது தாய் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேஷ்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நரேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






