என் மலர்
ஈரோடு
- வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
- வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மின்சாரவாரிய குடியிருப்பு அருகில் வேட்டையப்ப கவுண்டர் (73). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வசித்து வருகின்றனர். வேட்டை யப்பகவுண்டருக்கு உடல்நிலை சரியில்லாததால் சம்பவத்தன்று காலை மனைவியுடன் அந்தியூர் மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் மதியம் 1.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்தது.வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதேபோல் அதேபகுதியில் குடியிருந்து வரும் வேலுசாமி (78). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் காலை அந்தியூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்புற இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வேலுசாமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவயி டம் வந்து விசாரணை செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து காவிரி ஆற்று வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பட்டப்பகலில் அடுத்தடுத்து வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் பர்கூர் மலை ப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்த தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோ ட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
அனைத்து கட்சியினரும் அ.தி.மு.க, உடைந்துவிட்டது என நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை. ஆகஸ்ட் 20-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டம், அனை வரும் ஒன்றாகத்தான் உள்ள னர் என்பதை வெளிப்படு த்தும். அடித்தட்டு மக்கள் மேன்பட கல்வி ஒன்றால் தான் முடியும். அதை கவனத்தில் கொண்டு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமணீதரன், கோவை மண்டல தகவல் தொழி ல்நுட்பப்பிரிவு பொரு ளாளர் மோகன்குமார், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தே வராஜ், துணை செயலாளர் எஸ்.ஜி. சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவ ரணி செயலாளர் குருராஜ், சசி பிரபு, அத்தாணி அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து,
ஒன்றிய ஜெயலலிதா பேரவை செய லாளர் ஓட்டல் கிருஷ்ணன், நகர இளைஞரணி செய லாளர் பார் மோகன், நகர பேரவை செயலாளர் பாலு சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா சம்பத், பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையன், சவுந்தரராஜன்,
நகைக்கடை அதிபர் கிருஷ்ணமூர்த்தி, முருக பிரகாஷ், கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராயண்ணன், இ.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை. பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
- மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
- அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் கைவெட்டி மல்ல நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் பிரபாகரன் (33).
கடந்த 2 வருடங்களுக்கு முன் ரவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ரவி தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கைவெட்டியூர் செல்லும் வழியில் உள்ள காலி இடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக உயிரிழ ந்தார்.
இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
- குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.
இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- 3-வது நாளாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,692 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. 3-வது நாளாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,692 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.02 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் பழைய டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (30), அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 138 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3,690 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மது விலக்கு போலீசார் மேற்கொண்ட ரோந்தில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் மது விற்றதாக மணிவேல்(40), பெரியவலசு பகுதியில் சுப்பிரமணி மனைவி அனுசியா (48), பவானி பகுதியில் வெள்ளியங்கிரி (52) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
- இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் அருகே யுள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் புஞ்சை துறைய ம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மாரியப்பன் (49) என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
வேலை முடிந்ததும் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மாரியப்பன் டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து மாரியப்பன் மற்றும் அவரது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி வெளியேற்றினர்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு துறையினரு க்கு தகவல் கொடுக்கப்ப ட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் மாரியப்பனின் டீ கடை மற்றும் வீட்டின் மேற்கூரை முழுவதும் பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் 2 சிலிண்டர்களை மீட்டனர். மேலும் டீ கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சில பாத்திரங்கள் சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவு டீ கடையில் வேலை முடிந்து செல்லும் போது விறகு கட்டையில் இருந்த தீயை சரி வர அணைக்காமல் கவனக்குறைவாக இருந்து தூங்க சென்றுள்ளதாக தெரியவந்தது.
இதனால் காற்றின் வேகத்தில் தீ உருவாகி படிப்படியாக விறகில் பற்றிய தீ டீ கடை முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- மனவேதனை அடைந்த கனகரத்தினம் வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. சாலையை சேர்ந்தவர் கனகரத்தினம் (52). கூலி தொழிலாளி. கனகரத்தினம் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கலைச்செல்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு விட்டு அவரது அம்மா வீட்டிற்கு கோபித்து சென்றார்.
இதில் மனவேதனை அடைந்த கனகரத்தினம் வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்ப க்கத்தினர் கனகரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகரத்தினம் உயிரிழந்தார்.
பலியானார்
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.
- குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.
பவானி:
பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நனைந்தபடியே நடந்து சென்றனர்.
அதேபோல் காலை சுமார் 7 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டு இருந்ததால் கிராம பகுதியில் இருந்து நகர பகுதிக்கு பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் நனைந்தபடியே சென்றனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.
- இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (34). இவர் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே கிளையில் வசூல் பிரிவில் அந்தியூர் நகலூரை சேர்ந்த ராமச்சந்திரன் (59) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கிளை மேலாளர் சக்திவேல் தனது வீட்டில் இருந்த போது அங்கு ராமச்சந்திரன் மற்றும் அந்தியூர் காலனியை சேர்ந்த துரையன் ஆகியோர் வந்துள்ளனர். விடுமுறை எடுப்பதற்காக சக்திவேலை தொடர்பு கொள்ள முடியா ததால் ராமச்சந்திரன் நேரில் அவரது வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அலுவலகத்துக்கு வருமாறு சக்திவேல் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அந்தியூர் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
தொடர்ந்து 2 பேரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தியூரில் போக்குவரத்துக் கிளை மேலாளரும், ஊழியரும் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது.
- இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.
சத்தியமங்கலம்:
ஆசனூர் அருகே உள்ள ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (37). பேக்கரி ஊழியர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது கிராமத்துக்கு சென்றார்.
அப்போது இருட்டில் புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஆசனூர் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் காயத்துடன் இருந்த பசுபதியை மீட்டு வனத்துறை ஜீப்பிலேயே சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி யாக இன்று பவானி சாகர் அணைக்கு மேலும் வினாடிக்கு 6,659 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.






