search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state worker"

    • டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
    • நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே ஓனாக்குட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் மேற்கு வங்க மாநிலம் மல்ட்டா மாவட்டம் ஹக்ரா ஹரி சந்திராபூர் பாபுக் பகுதியை சேர்ந்த ரபிஹஸ்தா (58) என்பவர் வேலை செய்து வந்தார். இவரும் தனது சகோதரர் மகன் ஹேமந்த் சரேணும் (25) தனியாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று ரபிஹஸ்தா தனக்கு உடல்நிலை சரியில்லை நான் வேலைக்கு வரவில்லை என ஹேமந்த் சரேணிடம் கூறியுள்ளார்.

    இதனை யடுத்து ஹேமந்த் சரண் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு இடை வேளை க்கு தங்கியிருக்கும் அறைக்கு வந்து பார்த்த பொழுது தனது சித்தப்பா எந்தவித பேச்சும், அசைவும் இல்லா மல் இருப்பது தெரிந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த அரசு டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதையடுத்து ஹேமந்த் சரேண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
    • வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

    ஈரோடு:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வேலை தேடி ரெயில் மூலம் சம்பவத்தன்று இரவு ஈரோடு வந்துள்ளார். ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுப்பகுதிக்கு வந்த அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர்.

    அந்த கும்பல் அந்த வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் அந்த வட மாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபரோ புகார் ஏதும் அளிக்காமல் ரெயில் ஏறி கேரளாவில் உள்ள நண்பரை பார்க்க சென்று விட்டார்.

    • மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(வயது30) என்பவர் சம்பளம் பேசி அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அவர் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு ரூ.20 ஆயிரம்வரை சம்பள பணத்தை ராஜேஷ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாள நிஷாத் (20) சச்சின் ( 20 ) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
    • மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பவானி:

    மேற்கு வங்க மாநிலம் பகரா பகுதியை சேர்ந்தவர் நியூர்லிகாஜு. இவரது மகன் மன்னன் காஜு (35). இவருக்கு சம்பா பிபி என்ற மனைவியும், ஹசன் காஜு என்ற மகனும் உள்ளனர்.

    இவர் திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ மீனாட்சி நகரில் தங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த சலா வுதீன் மற்றும் திருப்பூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மோகன்ராஜ் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

    இவரின் மனைவி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மன்னன் காஜு மற்றும் அவர்களது நண்பர்களான சையது, இன்தாஜில் ஆகிய 3 பேர் சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சித்தோடு அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதை கண்ட அவருடன் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் தண்ணீர், டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தொழிலாளி விகாஷ் மார்க்கி எதிர்பா ராத விதமாக கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது
    • முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது

    டி.என்.பாளையம்

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு அருகேயுள்ள காளியூர் காலனி பகுதியில் தரைப்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது பாலத்தின் பக்கவாடுகளில் இரும்பு தகரம் பொருத்தும் பணி நடைபெற்று போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழி லாளி விகாஷ் மார்க்கி (19) பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்பொழுது எதிர்பா ராத விதமாக விகாஷ் மார்க்கி தவறி கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த சத்திய மங்கலம் தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போரா ட்டத்திற்கு பிறகு விகாஷ் மார்க்கியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்க ப்பட்ட விகாஷ் மார்க்கியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக விகாஷ் மார்க்கியை கோபியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

    முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் துரித மாக செயல்பட்டு வடமாநில கட்டிட தொழி லாளியை உயிருடன் மீட்டு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்க ளை மக்கள் வெகு வாக பாராட்டினர்.

    • தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு பூட்டு, ஜன்னல்கள், மோட்டார் ரூம் ஆகியவைகள் உடைத்து பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.
    • முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முகம் புரம் அருகே எஸ்.பி.ஜி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது71). இவர் முத்தையா புரம் சுபாஷ்நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு ள்ளார்.அதில் 3 வீடுகளில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்து தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு பூட்டு, ஜன்னல்கள், மோட்டார் ரூம் ஆகியவைகள் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 10 வடமாநில தொழி லாளர்கள் வைத்தி ருந்த 10 செல்போன்கள், காமிரா, டி.வி.ஆர்.பாக்ஸ், ரூ. 9 ஆயிரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோனுக்குமார் தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையம் என்.டி.பி.எல்.லில் மெக்கானிக் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • இவர் கழிப்பறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோனுக்குமார் (வயது 28). இவர் தூத்துக்குடி தெர்மல்- கோவில்பிள்ளை நகர் 2-வது தெருவில் தங்கியிருந்து புதிய அனல் மின் நிலையம் என்.டி.பி.எல்.லில் மெக்கானிக் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு இவர் பணியில் இருக்கும்போது கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அது பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், தென்காபாதார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் மிஸ்ரா (42).

    கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேட்டுப்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் குமார் மிஸ்ராவுடன் தங்கி இருந்த நபர் வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

    ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது . இது குறித்து அந்த நபர் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோஜ் குமார் மிஸ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சந்திப்பு பகுதி சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார்.
    • ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாட்டபத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பருடன் சந்திப்பு பகுதியில் மெயின்ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக பிலால், சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்த் மற்றும் அவரது நண்பரை தேடி வந்தனர். நேற்று ஆனந்த் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு, அக். 23-

    பீகார் மாநிலம் முஜபூர் மாவட்டம் சிவதோஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (23). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு அனிஷாதேவி என்பவருடன் கடந்த மே மாதம் பீகாரில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மனைவியை அங்கேயே விட்டுவிட்டு சுஜித்குமார் கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஈரோட்டுக்கு வந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சுஜித்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான் வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார். அதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கிய வடமாநில தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்துள்ளது. #Kerala #Lottery
    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தேரி பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி தொழிலாளர்களாக பணி செய்து வருகிறார்கள். இவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விஸ்வஜித்ராய். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அங்கு தொழில் நலிவடைந்ததால் கேரளாவில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் இவர் கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கி இருந்தார்.

    சமீபத்தில் இதன் குலுக்கல் நடந்தது. இதில் விஸ்வஜித்ராய் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்தது. இதுபற்றி விஸ்வஜித்ராய் கூறியதாவது:-

    எனது தாய், தந்தையர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது சகோதரிக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது. ஊரில் விவசாயம் சரிவர நடைபெறாததால் நான் கேரளாவுக்கு வந்து கட்டிட தொழில் செய்து வந்தேன்.

    பல ஆண்டுகளாக நான் லாட்டரிச்சீட்டுகள் வாங்கி வருகிறேன். இதுவரை பரிசு எதுவும் எனக்கு கிடைத்தது இல்லை. தற்போது முதல் பரிசு ரூ.60 லட்சம் கிடைத்து உள்ளது. முதலில் என்னால் அதை நம்பமுடியவில்லை. அருகில் உள்ள லாட்டரி ஏஜென்டிடம் எனது லாட்டரிச் சீட்டை காண்பித்து உறுதி செய்துகொண்டேன். லாட்டரி பரிசு பணம் மூலம் எங்கள் ஊரில் சொந்தமாக வீடு கட்டுவேன். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். எனது சகோதரி மற்றும் உறவினர்களுக்கும் உதவிகள் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kerala #Lottery
    ×