தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலி

மோனுக்குமார் தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையம் என்.டி.பி.எல்.லில் மெக்கானிக் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவர் கழிப்பறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் வந்துள்ளது.
தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலி
Published on

தூத்துக்குடி:

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோனுக்குமார் (வயது 28). இவர் தூத்துக்குடி தெர்மல்- கோவில்பிள்ளை நகர் 2-வது தெருவில் தங்கியிருந்து புதிய அனல் மின் நிலையம் என்.டி.பி.எல்.லில் மெக்கானிக் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் பணியில் இருக்கும்போது கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அது பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com