வட மாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த கும்பல்

வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.
வட மாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த கும்பல்
Published on

ஈரோடு:

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வேலை தேடி ரெயில் மூலம் சம்பவத்தன்று இரவு ஈரோடு வந்துள்ளார். ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுப்பகுதிக்கு வந்த அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர்.

அந்த கும்பல் அந்த வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் அந்த வட மாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபரோ புகார் ஏதும் அளிக்காமல் ரெயில் ஏறி கேரளாவில் உள்ள நண்பரை பார்க்க சென்று விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com