நெல்லையில் வடமாநில தொழிலாளியிடம் ஆடைகளை திருடிய வாலிபர் கைது

சந்திப்பு பகுதி சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார்.ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.
நெல்லையில் வடமாநில தொழிலாளியிடம் ஆடைகளை திருடிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

நெல்லை டவுன் பாட்டபத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பருடன் சந்திப்பு பகுதியில் மெயின்ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.

இதுதொடர்பாக பிலால், சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்த் மற்றும் அவரது நண்பரை தேடி வந்தனர். நேற்று ஆனந்த் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com