என் மலர்
நீங்கள் தேடியது "கடையில் செல்போன் திருடிய"
- கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (30). இவர் விஜயமங்கலம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது கடையை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள வங்கிக்கு சென்றார். இதையடுத்து அவர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
இதனை கண்ட நந்தா சத்தம் போட்டார். இதை கண்ட பொதுமக்கள் செல்போன் திருடி கொண்டு ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (42). கூலி தொழிலாளி என்பதும், கடையில் செல்போனை திருடியதும் தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






