search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in fire accident"

    • தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.
    • வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டிட கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெ ண்ணைய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஸ்டவ்வில் இருந்து தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.

    அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது.
    • மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில், கவுண்ட ன்பாளையம் சக்தி நகர் காலனியை சேர்ந்தவர் குண சேகரன். இவர் பெருந்துறை யில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சி.சி.டி.வி. கேமிரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ள கோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி தங்கிருந்த வீடு குடிசை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
    • மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).

    சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.

    அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.
    • எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வி.வி.சி.ஆர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார்(42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.

    வேதனை தாங்காமல் மனோஜ் குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த அவரது தந்தை, ராமன்குட்டி அண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைகாக மனோஜ் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×