இளம்பெண் தீ விபத்தில் உடல் கருகி பலி

தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார். வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.
இளம்பெண் தீ விபத்தில் உடல் கருகி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டிட கூலி தொழிலாளி.

இந்நிலையில் சம்பவ த்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெ ண்ணைய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஸ்டவ்வில் இருந்து தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com