தீ விபத்தில் உடல் கருகி வாலிபர் பலி

மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் உடல் கருகி வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு வி.வி.சி.ஆர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார்(42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.

வேதனை தாங்காமல் மனோஜ் குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த அவரது தந்தை, ராமன்குட்டி அண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைகாக மனோஜ் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com