என் மலர்
ஈரோடு
- மங்கல இசையுடன் கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மகா கணபதிக்கும், மகா மாரியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.
- தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
- இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.
ஈரோடு:
கோவை கூடுதல் தொழி லாளர் ஆணையர் தமிழரசி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் தரப்பில் எல்.பி.எப். நெடுஞ்செழியன் உள்பட பலரும், நிர்வாக தரப்பில் சிமா, சிஸ்பா பிரதிநிதிகள் செல்வராஜூ, ஜெகதீஸ் சந்திரன் உள்பட சிலரும், அதிகாரிகள் தரப்பில் சிலரும் இடம் பெற்றுள்ள னர்.
இக்குழுவினர் வரும் 12-ந் தேதி ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலைகளில் கம்பேசிட், ஸ்பின்னிங், வீவிங், சைசிங், வார்பிங், ஸ்பின்னிங் மில்களில் பணி செய்யும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விபரம் பெற உள்ளனர்.
ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
இக்கூட்டத்தில் தொழி லாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கடந்த 3 நாட்களாக பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,718 கன அடியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. எனினும் பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.62 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
+2
- ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற் மையமாக திகழும் இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
- மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. சிப்காட் தொடங்கினால் இந்த பகுதி மக்களுக்கு தொழில் வளம் பெருகும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என கருதி கிராம மக்களும், விவசாயிகளும் தங்கள் நிலத்தை வழங்கினர்.
ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற் மையமாக திகழும் இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சாய, தோல் ஆலைகள் மட்டுமின்றி அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
அதன்படி ஆலைகளும் உற்பத்தியை தொடங்கி தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சிப்காட்டில் இயங்கும் சில நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஆலை கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. இதன் காரணமாக சிப்காட் வளாகத்தில் இருந்து ஓடையில் பெருக்கெடுத்து வரும் கழிவு நீர் 14 ஏக்கர் பரப்பிலான ஓடைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பி உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அடுத்தடுத்து 8 குளங்களுக்கு செல்கிறது.
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், பாழத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்பி இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
சோளம், கம்பு, ராகி, காய்கறிகள் விளைந்த பூமியில் கால்நடைகளை கூட மேய்க்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
அபாயகரமான ரசாயன கழிவுகளால் தோல் நோய்களும், சுவாச கோளாறுகளும், ஏற்படுவதுடன் புற்று நோய் பாதிப்புகளும் இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. இதனால் பலர் கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து சமீபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம், சாணார்பாளையம், கொங்கம்பாளையம், உத்தண்டி நாயக்கன் புதூர் மற்றும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட எலையம்பாளையம், முருகம்பாளையம், சுள்ளிமேடு, தோட்டத்து புதூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
சமீபத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட இடங்களில் உள்ள நீரில் கரைந்து உள்ள அனைத்து கனிம மற்றும் கரிம பொருள்களின் அளவீடு அதிக அளவில் உள்ளதால் குடிப்பதற்கு ஏற்றது அல்ல என்ற காரணத்தால் சம்பந்தப்பட்ட இடங்களில் சிவப்பு குறியீடு இட்டு குடிநீருக்கு ஏற்றது அல்ல என அறிவிப்பு பலகை வைத்து மின் மோட்டார்களை இயக்க கூடாது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் எடுத்து மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளனர்.
தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. மேலும் சாய, தோல் ஆலை கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால் இவற்றையும் மீறி ரசாயன ஆலை கழிவு நீர் ஓடைகளில் வெளியேற்றப்படுகிறது.
எனவே நிலம், நீர் காற்று மாசுபாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து வாழ தகுதியற்ற பகுதியாக மாறி போன இந்த கிராமங்களை மாசற்ற பகுதியாக மாற்ற தேவையான சாத்திய கூறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
- பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
- கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.
9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.
9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
- மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்ப ட்டியைச் சேர்ந்த பாண்டி 50 என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுக மாகினார்.
சிவாஜியிடம் பாண்டி என்பவர் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகள வில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி கூறி உள்ளார்.
இதனை நம்பிய சிவாஜி 15 லட்சம் ரூபாய் பணம் கமிஷனாக கிடைப்பதால் 35 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து க்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார்.
பரிசல்துறைக்கு வந்தவு டன் ராஜ்குமாருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.
கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து வந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி எனது பணம் 35 லட்சத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்க ப்பட்டது. பின்னர் லக்காபுரம் பரிசல் துறை சோலார் உள்ளிட்ட இடங்களில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை மொடக்கு றிச்சி போலீசார் முதல் கட்டமாக ஆய்வு செய்து வருகின்றனர். தவிர மொ பைல் எண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு ள்ளனர்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் கேரளா கும்பல் கைவரிசை காட்டியது போல் சிவாஜியிட மும் அந்த கும்பல் கைவரிசை காட்டினார்களா? ராஜ்குமார் என்பவர் யார்? பாண்டிக்கும் ராஜ்குமாருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கோணத்தில் மொடக்குறிச்சி போலீசார் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
- இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு காரில் கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை ஒரு கும்பல் கொ ள்ளையடித்து சென்றது.
இதை யடுத்து கொள்ளைய ர்களை பிடிக்க அமைக்கப்ப ட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்க ளில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொ ள்ளை சம்ப வத்தில் இதே கம்பெனியில் வேலை ப்பார்த்த ஊழியர் மற்றும் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் பலரை ைகது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தலைமறை வாக இருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த செல்வம் (24), விக்னேஷ் (22) ஆகிய 2 பேரை போலீசார் தேடிவ ந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். இதையடுத்து சென்னிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினர்.
போலீசார் அவர்கள் 2 பேரையும் புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாள் விசாரணை முடிந்ததும் மீண்டும் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில்அடைக்க பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது-
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சிலரிடம் இருந்து ரூ. 5லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள தர்மதுரை என்பவரை தொடர்ந்து தேடிவருகிறோம். அவர் பிடிபட்டதால் தான் மீதி பணமும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாரத பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பொதுமக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பெறலாம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த சேவை, மக்களுக்கு சேவை, ஏழை, எளிய மக்களின் நலன் என செயல்படுவதாகவும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி.
ஏழை, எளிய மக்களுக்கும் உலக தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.இந்தியாவின் 100-வது சுதந்திர ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைத்து நாட்டிற்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து வரும் நீலகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து பவானிசாகர் தொகுதி மண்டல தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மேலும் புளியம்பட்டி நகராட்சி பகுதி சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கோரி மனு அளித்தனர். மலை கிராம பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி பவானிசாகர் மண்டல் சார்பாக ஈஸ்வரமூர்த்தி, தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் சதீஷ்குமார், சந்திரசேகர், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நீரா பாலகிருஷ்ணன்,
விவசாய அணி மாவட்ட பொதுச்செ யலாளர் ரகு சூர்யா, இளை ஞரணி தலைவர் லட்சும ணன், செயலாளர் வேலு ச்சாமி, துணைத்தலைவர் தீபா சாகர், சமூக ஊடக மாவட்ட துணை த்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணைத்தலைவர் சின்ராஜ், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன்,
மாவட்ட பொதுச் செயலா ளர் சக்திவேல், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் கந்தவேல், ஆன்மீக பிரிவு தலைவர் மற்றும் புளி யம்பட்டி நகர சார்பில் நகரத்தலைவர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. தலைவர்கள், பொறு ப்பாளர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.
- மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்:
சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் தவிட்டுப்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33), தனது மீன் கடைக்கு அருகில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரது கடையின் அருகில் இருந்து மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- நரேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நைக்கான் காடு, கண்ணகி தெருவை சேர்ந்தவர் நரேஷ் குமார் (39). கேட்டரிங் மற்றும் சமையல் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வயிற்று வலியை தாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்தார்.
இதனையடுத்து நரேஷ்குமாருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
அவரது தாய் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேஷ்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நரேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
- இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 50 லட்சம் ஆகும்.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4,282 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் முதல் தரக் கொப்பரைகள் 2,370 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 63.00க்கும், அதிகபட்சமாக ரூ. 77.60க்கும் விற்பனையாகின.
இரண்டாம் தரக் கொப்பரைகள் 1,912 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 16.16க்கும், அதிகபட்சமாக ரூ. 70.67க்கும் விற்பனையாகின.
மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 50 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- இதேப்போல் கேரட், பீட்ரூட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்தது. சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையானது.
இதைத்தொடர்ந்து தக்காளி வரத்து சற்று அதிகரித்து இருப்பதால் ரூ.100-110 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேப்போல் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. தற்போது ரூ.100-110 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தக்காளியை தொடர்ந்து சமீபகாலமாக பச்சை மிளகாய், பீன்ஸ், கருப்பு அவரை, இஞ்சி, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதேப்போல் கேரட், பீட்ரூட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ராசிபுரம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 16 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர தொடங்கியது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து 8 டன்னாக குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லரை விற்பனையில் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.110-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.110-க்கும், கருப்பு அவரை ஒரு கிலோ ரூ.110-க்கும் விற்கப்படுகிறது. சமீப காலமாக இஞ்சியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி ஒரு கிலோ விலை கடந்து ஒரு மாதமாக விலை ஏறி வருகிறது. இன்று புதிய உச்சமாக ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்கப்பட்டது. பழைய இஞ்சி ஒரு கிலோ 300-க்கும், புதிய இஞ்சி ஒரு கிலோ ரூ.180-190-க்கும் விற்கப்படுகிறது.
இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமையலை பொறுத்தவரை தக்காளி, சின்ன வெங்காயம் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
முள்ளங்கி-35, வெண்டைக்காய்-30, கத்திரிக்காய்-60, பாவை க்காய்-60, பீர்க்கங்காய்-60, புடலங்காய்-40, கொத்தவரங்காய்-30-40, சுரைக்காய்-20, முருங்கைக்காய்-60, சவ்சவ்-25, பீட்ரூட்-60, கேரட்-80, முட்டை கோஸ்-25, காலிப் பிளவர்-40, பட்டவரை-60, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-30.






