search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த உயர்மட்ட குழு கூட்டம்
    X

    மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த உயர்மட்ட குழு கூட்டம்

    • மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொ டர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம்,

    கல்வித்துறை, காவல்துறை, கூட்டு றவுத்துறை, பொது ப்பணித்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, நெடு ஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொட ர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட ப்பணிகளையும் துரி தப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு கலெக்டர் அறி வுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர்- திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ்,

    கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வராஜன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாள ர்கள் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (ஈரோடு) மோகன், (பெருந்துறை) .உதயகுமார்,

    துணை இயக்குநர் (பொது சுகா தாரம்) டாக்டர் சோம சுந்தரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×