என் மலர்tooltip icon

    ஈரோடு

    • புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • இந்த பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கொடுமுடி அருகே வடுகனூரில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் போடப்பட்டிருந்த கான்கிரீட் கரைகள் உடைந்து சிதிலமடைந்தன.

    இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை அதிகாரிகள் சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அவர்களின் குறைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி ரேனுகா. இவர்களது மகன் மணி கண்டன் (30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இதனால் மணிகண்டன் மன வேதனையில் இருந்து வந்தார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக வும், இதனால் அவர் தின மும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று காலை மணிகண்ட னின பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். அவர்கள் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர், அப்போது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பெரியாண்டிபாளையம் , சிப்காட், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    ஈரோடு:

    பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட்  துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், புதூர், பனியம்பள்ளி,

    தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம். சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி,

    சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். பெருந்துறை தெற்கு பகுதி, மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி,

    வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    • காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன.
    • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வெளியேறும் யானை கூட்டம் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வந்து இருக்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன. அந்த யானைகள் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வந்தன.

    ரோட்டில் யானை கூட்டம் இருப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானை கூட்டம் ரோட்டை கடந்து மீண்டும் வனபகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கியது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை கூட்டம் அடிக்கடி இங்கு வந்து சாலையை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்கி யானைகள் கூட்டம் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது.

    அதை மீறி எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.18 அடியாக உயர்ந்து உள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • சுவஸ்திக் கார்னர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்ட ப்பட்டு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் தரைவழி மின்சார இணைப்பு பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் ரோட்டில் இருந்து சத்தி ரோடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

    ஆனால் அதே சமயம் சக்தி ரோட்டில் இருந்து மேட்டூர் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் அந்த வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    மாறாக அந்த வாகனங்கள் சக்தி ரோட்டில் இருந்து நேராக நாச்சியப்பா வீதி வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் சாலைகள் குறுகலாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சக்தி ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு சக்தி ரோடு மிக முக்கியமான போக்குவரத்து பகுதியாக உள்ளது. ஈரோ ட்டில் இருந்து சித்தோடு, கோபி, கவுந்த ப்பாடி, சத்தியமங்கலம் செல்லும் அனைத்து வாகனமும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

    இதேப்போல் அங்கிருந்து ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் சக்தி ரோடு வழியாகத்தான் வருகின்றன.

    இதேபோல் தற்போது அனைத்து வாகனங்களும் நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால் நாச்சியப்பா வீதியில் கடந்த 2 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சக்தி ரோடு பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.

    • கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசின் கொள்முதலை அனைத்துப் பொருட்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டும்.

    தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன்னுக்கு ரூ. 5000, மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3000, மாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ. 75 வழங்கிட வேண்டும்.பட்டுப்புழுவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.700 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 150 நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழைப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். பாண்டியாரு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்றை மாசுபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அன்னூர் பவானிசாகர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பெருந்துறை ரோடு அடுத்த கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் கடந்த 5-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றைய காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இனாம் விவசாயிகள் இணை ஒருங்கிணைப்பாளர் கருணா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராய பாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம்,

    ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், பி.பெ.அக்ரகாரம்,

    மரவபாளையம், சி.எம். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.டி.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரிய புலியூர், சேவக்கவுண்டனூர்.

    மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம் பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லி யம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்,

    வில்லரசம் பாளையம், கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டன் பாளையம், கதிரம் பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளை யம், சிந்தன் குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர்,

    தென்றல் நகர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது.
    • மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில், கவுண்ட ன்பாளையம் சக்தி நகர் காலனியை சேர்ந்தவர் குண சேகரன். இவர் பெருந்துறை யில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சி.சி.டி.வி. கேமிரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ள கோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி தங்கிருந்த வீடு குடிசை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

    சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ேஹாம், மருத்துவ பரிசோதனை கூடங்கள் என 103 நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், காலணிகள், சிகரெட், லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என 66 நிறுவன ங்களில் ஆய்வு செய்ததில் 2 நிறுவன ங்களில் முரண்பாடு அறியப்பட்டது.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பாக 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் குறைந்த பட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்காத 1 நிறுவனம் மீது நடவடிக்கைக்கு ஈரோடு தொழிலாளர் இணை ஆணையருக்கு படிவம் தாக்கல் செய்துள்ளனர்.

    குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என்பது குறித்து 415 நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில் குறைபாடு கண்டறியப்படவில்லை. அந்நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆய்வு குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிக பட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணி அமர்த்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது கைது செய்யப்பட்டு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (30). இவர் விஜயமங்கலம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது கடையை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள வங்கிக்கு சென்றார். இதையடுத்து அவர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.

    இதனை கண்ட நந்தா சத்தம் போட்டார். இதை கண்ட பொதுமக்கள் செல்போன் திருடி கொண்டு ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (42). கூலி தொழிலாளி என்பதும், கடையில் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
    • மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பவானி:

    மேற்கு வங்க மாநிலம் பகரா பகுதியை சேர்ந்தவர் நியூர்லிகாஜு. இவரது மகன் மன்னன் காஜு (35). இவருக்கு சம்பா பிபி என்ற மனைவியும், ஹசன் காஜு என்ற மகனும் உள்ளனர்.

    இவர் திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ மீனாட்சி நகரில் தங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த சலா வுதீன் மற்றும் திருப்பூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மோகன்ராஜ் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

    இவரின் மனைவி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மன்னன் காஜு மற்றும் அவர்களது நண்பர்களான சையது, இன்தாஜில் ஆகிய 3 பேர் சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சித்தோடு அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதை கண்ட அவருடன் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் தண்ணீர், டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×