ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை

ரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
Published on

ஈரோடு:

கிருஷ்ணகிரி மாவட்டம் அயிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). திருமணம் ஆனவர். ஒரு குழந்தை உள்ளது. பிரவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஓட்டல் அருகே மாடி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு பிரவீன்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் இன்று காலை வேலைக்கு வர வில்லை.

இதையடுத்து ஓட்டலில் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கழுத்தை அறுத்து தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிரவீன்கு மார் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொ லை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பிரவீன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com